ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தூக்கு: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு துாக்கு லக்னோ :உத்தர பிரதேசத்தில், கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இங்கு, படாவுன் மாவட்டத்தில் உள்ள உரைனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிஷன்பால், இவரது மனைவி ஜல்தாரா மற்றும் மகன்கள் விஜய்பால், ராம்வீர். இதே கிராமத்தைச் சேர்ந்த பப்பு சிங்கின்
Crime, Murder, Police, Arrested,
ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு துாக்குலக்னோ :உத்தர பிரதேசத்தில், கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இங்கு, படாவுன் மாவட்டத்தில் உள்ள உரைனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிஷன்பால், இவரது மனைவி ஜல்தாரா மற்றும் மகன்கள் விஜய்பால், ராம்வீர். இதே கிராமத்தைச் சேர்ந்த பப்பு சிங்கின் மகன் கோவிந்தும், ௨௪, கிஷன்பால் மகள் ஆஷாவும், ௨௨, காதலித்தனர். இதை, கிஷன்பால் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால், காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து புதுடில்லி சென்றுவிட்டது.

இதைஅடுத்து, கிஷன்பால் தன் மகள் ஆஷாவிடம், இரு வீட்டார் சம்மதத்துடன் மீண்டும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, இளம் தம்பதியை கிராமத்துக்கு வரவழைத்துள்ளார். ஊர் திரும்பிய கோவிந்தை, கிஷன்பால் கோடாரியால் தாக்கிக் கொன்றார். கோவிந்த்தை காப்பாற்றச் சென்ற ஆஷாவை, கிஷன்பால் குடும்பத்தினர் தாக்கிக் கொன்றனர்.கடந்த, ௨௦௧௭ல் நடந்த இச்சம்பவம் குறித்து பப்பு சிங் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கிஷன்பால் குடும்பத்தினர் கொன்றவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் போது, அக்கம் பக்கத்தினர் பார்த்து, அவர்களும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில், கிஷன்பாலும், அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், கிஷன்பால், அவரது மனைவி மற்றும் இரு மகன்களுக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிபதி பங்கஜ் அகர்வால் நேற்று உத்தரவிட்டார்.


வீடு புகுந்து நகை திருட்டு; 3 பேர் கைது; :16 சவரன் மீட்புசெஞ்சி : விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகைகளைத் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, 16 சவரன் நகைகளை மீட்டனர்.விழுப்புரம் அடுத்த நரசிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் டான்கேரேஜ், 30; இவர், கடந்த மாதம் 13ம் தேதி வெளியூர் சென்றிருந்தார்.திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 16 சவரன் நகைகள், 2 எல்.இ.டி., 'டிவி'க்கள் திருடு போனது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.


latest tamil newsஇந்நிலையில் நேற்று காலை கஞ்சனுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையில் போலீசார் அனந்தபுரம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் மாவட்டம், வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ், 25; பயத்தம்பாடி ராமலிங்கம் மகன் ராமு, 24; குச்சிப்பாளையம் குணசேகரன் மகன் நல்லசிவம், 20; என தெரியவந்தது.மேலும், மூவரும் டான்கேரேஜ் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள், 2 எல்.இ.டி., 'டிவி'க்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.


மாணவிகளை​ கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு தர்ம அடிகமுதி : கமுதி அருகே பள்ளி மாணவியை​கத்தியை காட்டி மிரட்டிய அருங்குளம் பிரவீன், வீரசோழன் சஞ்சய், மேலப்பருத்தியூர் பூப்பாண்டி கைது செய்யப்பட்டனர்.கமுதி அருகே சிலிப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வெளியூரில் இருந்து வந்த இளைஞர்கள் ஊர் அருகே காட்டுப்பகுதியில் தங்கி மது, கஞ்சா அருந்தி வந்தனர். சிலிப்பி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் எழுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற போது இந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டினர்.

அச்சமடைந்த மாணவிகள் பெற்றோருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சிலிப்பி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சீமை கருவேலங்காட்டிற்குள் பதுங்கி இருந்த இளைஞர்கள் 3 பேரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின் மண்டலமாணிக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பரமக்குடி அருகே அருங்குளம் பிரவீன் 24, வீரசோழன் சஞ்சய் 19, மேலப்பருத்தியர் பூப்பாண்டி 19, ஆகியோர் என தெரிந்தது. இவர்களை கைதுசெய்தனர்.சஞ்சய், பிரவீன் மீது பரமக்குடி,பார்த்திபனூர் உட்பட பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளது.


என்.ஐ.ஏ.,விடம் சிக்கிய மூவர் சிறையில் அடைப்புகாரைக்கால் : காரைக்காலில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய எஸ்.டி.பி.ஐ., மாநில துணை தலைவர் உள்ளிட்ட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காரைக்கால் தோமாஸ் அருள் வீதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., மாநில துணை தலைவர் முகமது பிலால்,38; காமராஜர் சாலையை சேர்ந்த முகமது ஹசன் குத்துாஸ்,35; திருப்பட்டினத்தில் பக்ரூதீன்,48; ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை

கைப்பற்றினர்.பின்னர் மூவரையும் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மூவரையும் காரைக்கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது, காரைக்கால் நகர போலீசார், ரகசிய கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மூவரும் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


பெண்ணை அடித்து கொலை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்புதுச்சேரி : பெண்ணை அடித்து கொலை செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.புதுச்சேரி, கோர்க்கோடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் சாந்தி,45; இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோர் 31ம் தேதி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம்


latest tamil newsஅடுத்த சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி பூபாலன்,50; சாந்தியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார், பூபாலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.மேலும், அவர் மீது புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், சாந்தியை கொலை செய்த பூபாலனுக்கு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜரானார்.


12 பைக் திருடியபலே ஆசாமி கைதுவிழுப்புரம் : விழுப்புரத்தில் 12 பைக் திருடிய பலே வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் ஜானகிபுரம் டாஸ்மாக் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பைக்குடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அய்யனார் என்கிற அப்பு, 28; என்பதும், அவர் மீது பண்ருட்டி, நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களில் 12க்கும் மேற் பட்ட வாகன திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது.மேலும், இவர் விழுப்புரத்தில் பல இடங்களில் பைக்குகள் திருடியதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


குண்டு வெடிப்பு; ஏழு பேர் பலிகாபூல் :ஆப்கானிஸ்தானில், மசூதி அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தலைநகர் காபூலில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர். தொழுகை முடிந்து மக்கள் கூட்டமாக வெளி வருகையில், மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 41 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
25-செப்-202211:16:48 IST Report Abuse
sankar பிஜபி ஆளுற ஸ்டேட்ல் இருந்து தான் பல மோசமான, சொடூரமான சம்பவம் நிறைய நடக்கிறது.. எதிர்க் கட்சி ஆளும் மாநிலங்கள் எவ்வளவோ பெட்டர்.
Rate this:
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
25-செப்-202215:32:33 IST Report Abuse
செல்வம்ஆப்கானிஸ்தானில் பாலும் தேனும் ஆறா ஓடுது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X