தெருநாய் கணக்கெடுப்பு துவங்கியது பெருக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை, மொபைல் போன் செயலி வாயிலாக கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது.ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை மொபைல் போன் செயலி வாயிலாக கணக்கெடுக்கும் பணியை, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கேரளா கிளப் சாலையில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து, கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
தெருநாய் கணக்கெடுப்பு துவங்கியது பெருக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி

கோவை:கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை, மொபைல் போன் செயலி வாயிலாக கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது.ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை மொபைல் போன் செயலி வாயிலாக கணக்கெடுக்கும் பணியை, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கேரளா கிளப் சாலையில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து, கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அதில், கமிஷனர் பிரதாப் பேசியதாவது:நாய்களின் இனப்பெருக்கம் அதிகளவில் உள்ளதால், 'டாக்ஸ் ஆப் கோயம்புத்துார்' அமைப்பு சார்பில் கணக்கெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, கிழக்கு மண்டல பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்டது. தற்போது, அனைத்து பகுதிகளிலும் இரு வாரம் கணக்கெடுக்கப்படும்.தெருநாய்களின் எண்ணிக்கை, செலுத்திய தடுப்பூசிகள், கருத்தடை செய்யப்பட்டுள்ளதா, வேறு ஏதேனும் உடல்நலக்குறைகள் உள்ளதா உள்ளிட்ட விபரங்களுடன் கணக்கெடுப்பு நிறைவு செய்யப்படும்.சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதுாரில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன. உக்கடத்தில் செயல்படாமல் இருந்த மையம், 28 முதல் மீண்டும் துவக்கப்படும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக இக்கணக்கெடுப்பு நடக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, பணிகள் குழு தலைவர் சாந்தி, வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா, வ.உ.சி., உயிரியல் பூங்கா இயக்குனர்செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X