நோயாளிகளிடம் கனிவாக பேசுங்க; செவிலியர்களுக்கு கமிஷனர் அறிவுரை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சையளிக்க, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், 40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி, 21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை

கோவை:கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சையளிக்க, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், 40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி, 21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அதேபோல், 12வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில், 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமான பணியை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை வழங்குமாறு டாக்டர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.வடக்கு மண்டலம், கே.என்.ஜி.புதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கமிஷனர், மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார். உதவி கமிஷனர் மோகனசுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X