மாணவர் கலைத்திறன் வளர்க்க புது முயற்சி அரசு பள்ளிகளில் திட்டம் அறிமுகமாகிறது!

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, 'கலை அரங்கம்' எனும் நிகழ்ச்சியின் கீழ் கலை சார்ந்த பயிற்சிகளும் ஆறு முதல், பிளஸ் 2 வகுப்புகளில்
மாணவர் கலைத்திறன் வளர்க்க புது முயற்சி அரசு பள்ளிகளில் திட்டம் அறிமுகமாகிறது!

திருப்பூர்:அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, 'கலை அரங்கம்' எனும் நிகழ்ச்சியின் கீழ் கலை சார்ந்த பயிற்சிகளும் ஆறு முதல், பிளஸ் 2 வகுப்புகளில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 'கலைத்திருவிழா' போட்டிகளும் நடத்திட திட்டமிட்டுள்ளது.இநத் கலை செயல்பாடுகளுக்கென ஒவ்வொரு வாரமும், இரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை இசை, நடனம், காட்சிக்கலை, நாட்டுப்புற கலை மற்றும் நாடகம், ஆகிய, ஐந்து கலை வடிவங்களுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளி வட்டார அளவில் உள்ள நாட்டுபுறக்கலைஞர்கள், பயிற்சியாளர்கள், கலை நெறியாளர்கள், வல்லுனர்கள், கலை தொடர்பான அரசு நிறுவனங்களை கண்டறிந்து, அக்கலைஞர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து, பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.பள்ளியின் பகுதி மற்றும் முழுநேர கலை ஆசிரியர்கள் இதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார். இல்லாவிடில், கலை பண்பாட்டு நிகழ்வுகளில் தன்னார்வத்துடன் செயல்பட விரும்பும் ஒரு ஆசிரியரை இதற்கு பொறுப்பு ஆசிரியராக தலைமை ஆசிரியர் நியமிக்கலாம்.


கல்வி சுற்றுலா


கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்கள் தாங்கள் விரும்பும் கலை வடிவத்தை முடிவு செய்து அதில் சேரலாம். ஒரு ஆண்டுக்கு, ஒரு குறிப்பிட்ட கலை வடிவத்தில் பயில வேண்டும். அடுத்தாண்டில் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் அக்., மாதம் முதல் துவங்கப்பட உள்ளது.டிச., முதல் பள்ளி அளவில் போட்டிகள் துவங்கும். ஜன., மாதம் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவியருக்கு 'கலையரசி' விருதும், மாணவர்களுக்கு 'கலையரசன்' விருதும், சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோரில், இருபது மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாட்டுபுறக்கலை

தமிழ் இசை, உடுக்கை, பறை, ஒயில், கரகாட்டம், கும்மி போன்ற நாட்டுபுறக்கலைகள், நாட்டியம், மயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், போன்ற நடனங்கள், பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற நாடகங்கள், புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், வரைதல், ஓவியம், களிமண் பொம்மை போன்ற காட்சிக்கலைகளில் ஏதேனும் இரண்டு முதல் மூன்று கலைகளை, பள்ளி சூழல் மற்றும் கலைஞர்களின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X