வனங்களுக்கு வெளியே மரம் வளர்ப்பு!

Added : செப் 24, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:தமிழகத்தில், 'வனப்பரப்புக்கு வெளியே' வன விரிவாக்கத்திற்கான தொழில்நுட்ப கருத்தரங்கு மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலமாற்றம் அமைச்சரகம், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமும் இணைந்து வனங்கள் மற்றும் காலநிலை தழுவல் என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவில்

மேட்டுப்பாளையம்:தமிழகத்தில், 'வனப்பரப்புக்கு வெளியே' வன விரிவாக்கத்திற்கான தொழில்நுட்ப கருத்தரங்கு மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலமாற்றம் அமைச்சரகம், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமும் இணைந்து வனங்கள் மற்றும் காலநிலை தழுவல் என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவில் வனங்களுக்கு வெளியே மரம் வளர்த்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், ஆறு தனியார் நிறுவனங்களும் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கான தொழில் நுட்ப கருத்தரங்கு மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.வனக்கல்லுாரி முதல்வர் பார்த்திபன் கருத்தரங்கை துவக்கிவைத்து பேசியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய வனப் பகுதிக்கு வெளியே, வனங்கள் விரிவுபடுத்துதல், கார்பன் அல்லது கரிமத்தன்மையை அதிகரித்தல், மரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல் ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசிய வனக் கொள்கை, 1988ல் குறிப்பிட்டுள்ள, 33 சதவீத வனங்கள் என்ற தேசிய இலக்கை அடையவும், இந்தியாவில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை அடையவும் இத்திட்டம் உதவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் திட்ட இயக்குனர் சந்திரசேகர், சர்வதேச வேளாண் வனங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிய கண்டத்திற்கான இயக்குனர் ஜாவேத் ரிஸ்வி, வேளாண் வனவியல் ஆராய்ச்சி மையத்தின் சர்வதேச கண்காணிப்பு மதிப்பீட்டு தலைவர் கார்ல் ஹிக்ஸ் ஆகியோர் பேசினர். இக்கருத்தரங்கில் தனியார் அமைப்பினர், திட்டத்தின் கூட்டமைப்பாளர்கள், விஞ்ஞானிகள், வனத்துறை, வேளாண்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், விவசாயிகள், தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X