பாலுக்கு ஆவின் நிர்வாகம் தரும் விலைகட்டுபடியாகலீங்க! தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

Added : செப் 24, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:ஆவின் நிர்வாகம் பாலுக்கு விலை உயர்த்தி தராததால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் இருந்து, தினமும் ஆவின் நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

மேட்டுப்பாளையம்:ஆவின் நிர்வாகம் பாலுக்கு விலை உயர்த்தி தராததால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் இருந்து, தினமும் ஆவின் நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிட்டர், பால் வழங்கப்படுகிறது. பாலில் உள்ள கொழுப்பு சத்துக்கு தகுந்தார் போல், ஆவின் நிறுவனம் பாலுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆவின் நிறுவனம், பாலுக்கு விலை உயர்த்தி தரவில்லை. அதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்க முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து காரமடை பகுதி விவசாயிகள் கூறியதாவது:பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பெறப்படும் பால் அனைத்தும், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. பாலில் உள்ள கொழுப்பு சத்துக்கு ஏற்ப, லிட்டருக்கு குறைந்த பட்சம், 28 லிருந்து, அதிகபட்சம், 30 ரூபாய் வரை விலை கொடுக்கின்றனர்.ஆனால், அதே பாலை தனியார் நிறுவனத்தில் வழங்கினால், லிட்டருக்கு, 36 ரூபாய் வரை விலை கொடுக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆவின் நிறுவனம் பாலுக்கு விலை உயர்வு வழங்கவில்லை. ஆனால் பசு மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள், புண்ணாக்கு, பருத்தி கொட்டை ஆகியவற்றின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் வழங்கும் விலையை விட, பால் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமாகிறது. மேலும் தீவனத்திற்கு வழங்கி வந்த மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனவே ஆவின் நிர்வாகம், உடனடியாக பாலுக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டும். ரத்து செய்த தீவன மானியம் மீண்டும் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு முன் வழங்கியது போன்று கூடுதல் விலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆவின் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றால், தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்க முடிவு செய்துள்ளோம். என, விவசாயிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X