இலவச பூஸ்டர் முகாம் நாளை கடைசி:இலவச பூஸ்டர் செலுத்த இறுதிவாய்ப்புநாளைய முகாமை பயன்படுத்த அறிவுறுத்தல் . நாளைய முகாமை பயன்படுத்த அறிவுறுத்தல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:தமிழக அரசின் முகாம் வாயிலாக இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், விடுபட்டவர்கள், நாளைய முகாமில் செலுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 90க்கும்

பெ.நா.பாளையம்:தமிழக அரசின் முகாம் வாயிலாக இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், விடுபட்டவர்கள், நாளைய முகாமில் செலுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 90க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு, பூஸ்டர் டோஸ், 25,000 மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பலர் பூஸ்டர் செலுத்த தயக்கம் காண்பித்து வருகின்றனர்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறுகையில்," இதுவரை ஞாயிற்றுக்கிழமை நடந்த முகாம்களில், 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.இதை பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இம்மாதம், 30ம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 18 வயது முதல், 59 வரை உள்ள நபர்கள் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.அக்., 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். எனவே நாளை நடக்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதன்பின், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியே போட இயலும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X