விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : செப் 24, 2022 | |
ஆலாந்துறை:உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மாவட்ட மனநல திட்டம் சார்பில், மத்துவராயபுரத்தில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி சிறுவாணி ரோடு, ராயர்கோவில் ரோடு வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. தற்கொலையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்

ஆலாந்துறை:உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மாவட்ட மனநல திட்டம் சார்பில், மத்துவராயபுரத்தில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி சிறுவாணி ரோடு, ராயர்கோவில் ரோடு வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. தற்கொலையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, தற்கொலைக்கான காரணங்களையும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், மனநல டாக்டர் ஹெலினா செல்வக்கொடி விளக்கிக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செம்மேடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தீபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X