மத பேதம் இல்லாத நுால் திருக்குறள்| Dinamalar

'மத பேதம் இல்லாத நுால் திருக்குறள்'

Added : செப் 24, 2022 | |
பேரூர்:உலக திருக்குறள் கூட்டமைப்பின் நான்காவது பொதுக்குழு கூட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியில் நேற்று துவங்கியது; இப்பொதுக்குழு மூன்று நாட்கள் நடக்கிறது. பொதுக்குழு கூட்டத்தையும், குறள்நெறி கரண ஆசான்கள் பயிற்சி வகுப்பையும், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள் துவக்கி வைத்தார். கூட்டமைப்பு தலைவர் சேகர் தலைமை வகித்தார். பொது
'மத பேதம் இல்லாத நுால் திருக்குறள்'

பேரூர்:உலக திருக்குறள் கூட்டமைப்பின் நான்காவது பொதுக்குழு கூட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியில் நேற்று துவங்கியது; இப்பொதுக்குழு மூன்று நாட்கள் நடக்கிறது. பொதுக்குழு கூட்டத்தையும், குறள்நெறி கரண ஆசான்கள் பயிற்சி வகுப்பையும், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள் துவக்கி வைத்தார். கூட்டமைப்பு தலைவர் சேகர் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஆதிலிங்கம் சிறப்புரையாற்றினார்.'குறள் நெறிக் கரணங்கள் பயிற்சி' கையேட்டை, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியன் வெளியிட, கோவை தமிழ் சங்கமம் தலைவர் துரைசாமி பெற்றுக்கொண்டார். ராமலிங்கம் எழுதிய, 'சிரிப்பில் மலரும் சிந்தனைகள்' என்ற நுாலை, ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் சுகுமார் வெளியிட, கம்பன் கழக தலைவர் சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.உலக திருக்குறள் கூட்டமைப்பு கொள்கை விளக்க செய்தி ஏட்டினை, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட, ஜோதி மைய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அன்வர் பாட்சா எழுதிய, 'உலக அமைதிக்கு குறள் காட்டும் வழி' என்ற நுாலை, முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் வெளியிட, புரவலர் விஜயசண்முகம் பெற்றுக்கொண்டார். நேற்று, 1,330 குறள் நெறி கரண ஆசான்களை உருவாக்குவதற்கான பயிற்சி வகுப்பு நடந்தது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்ச்சிகளை, திருக்குறளை கொண்டு நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.கூட்டத்தில், முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் பேசுகையில், ''திருவள்ளுவரை புலவராக மட்டுமின்றி தலைவராகவும் ஏற்க வேண்டும். மத பேதம் இல்லாத நுாலாக திருக்குறள் உள்ளது. திருக்குறள் இல்லாத வீடுகள் இருக்கக் கூடாது. அறங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் உலகம் முழுவதும் கொண்டு சென்ற நுால் திருக்குறள்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X