மீண்டும் 'இனிக்கும்' கரும்பு சாகுபடி! 'கன்னல் விழா'வில் தகவல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:''கோவை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கான, 'கன்னல் விழா' நேற்று நடந்தது. கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சியை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்து
மீண்டும் 'இனிக்கும்' கரும்பு சாகுபடி! 'கன்னல் விழா'வில் தகவல்

கோவை:''கோவை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கான, 'கன்னல் விழா' நேற்று நடந்தது. கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சியை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்து பேசியதாவது:கடந்த ஆண்டை விட இப்போது கரும்பு உற்பத்தி, நாடு முழுவதும் 50 லட்சம் ஹெக்டேரில் இருந்து 58 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி, 5,000 ஹெக்டேரில் இருந்து, 500 ஹெக்டேராக குறைந்துள்ளது. இப்பிரச்னைக்கு தொழிலாளர் தேவை அதிகரிப்பு, தண்ணீர் தேவை ஆகிய இரு காரணங்கள் உள்ளன. இதனால் கரும்பு உற்பத்தி செய்ய விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் கரும்பு சாகுபடியை லாபகரமானதாக மாற்றுவதற்கான தீர்வு உள்ளது.கரும்பு உற்பத்தி எதிர்காலத்தில் அதிக லாபம் தரும். வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தியுள்ள பயிர் ஊக்கியை பயன்படுத்தினால், 15 - 20 சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம். கோவை மாவட்டத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பயிர் பாதுகாப்பு துறை தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் ஹேமபிரபா தலைமை வகித்தார்.மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சித்ராதேவி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன மண்டல மைய முதுநிலை விஞ்ஞானி ரத்தினவேலு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக மத்திய பொறியியல் ஆராய்ச்சி நிறுவன மண்டல மையத் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X