கோவைப்புதூர், குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவைப்புதுார், குனியமுத்துார் ஆகிய பகுதிகளில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவைப்புதுார் பரிபூரண எஸ்டேட் பின்புறம் உள்ள விநாயகா நகரை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை அமைப்பான, சமஸ்கிருத பாரதியின் தமிழக-, கேரள கேந்திர நிர்வாகியாக உள்ளார். இவரது வீட்டில், நேற்றிரவு, மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை

கோவை:கோவைப்புதுார், குனியமுத்துார் ஆகிய பகுதிகளில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவைப்புதுார் பரிபூரண எஸ்டேட் பின்புறம் உள்ள விநாயகா நகரை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை அமைப்பான, சமஸ்கிருத பாரதியின் தமிழக-, கேரள கேந்திர நிர்வாகியாக உள்ளார். இவரது வீட்டில், நேற்றிரவு, மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர். தீப்பிடிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். தகவலறிந்து, ஹிந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டதால் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.* கோவை சாய்பாபாகாலனியில், சாலையோரத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த பைக், அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பைக் எப்படி தீப்பிடித்து எரிந்தது என்பது குறித்த விபரம் தெரியவில்லை.* குனியமுத்துார் ஞானபுரம் அருகே, சுப்புலட்சுமி நகரில் வசிக்கும், கோவை பா.ஜ., இளைஞரணி பொறுப்பாளர் பரத் வீட்டில், நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமானது. குனியமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக, கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், உளவுத்துறை உதவி கமிஷனராக நேற்றிரவு நியமிக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X