கோடநாடு வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை| Dinamalar

கோடநாடு வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை

Added : செப் 24, 2022 | |
ஊட்டி:'கோடநாடு கொலை வழக்கில் இதுவரை, 316 பேரிடம் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என, அரசு வக்கீல் கூறினார்.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆஜராகினர்.பின், அரசு தரப்பு
கோடநாடு வழக்கில்  இதுவரை 316 பேரிடம் விசாரணை

ஊட்டி:'கோடநாடு கொலை வழக்கில் இதுவரை, 316 பேரிடம் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என, அரசு வக்கீல் கூறினார்.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆஜராகினர்.பின், அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறியதாவது:இந்த வழக்கில் இதுவரை, 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் மூளையாக செயல்பட்டு, சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கனகராஜின் பெயரில் இருந்த, 6 சிம்கார்டுகள் மற்றும் 16 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் நடந்தபோது, 516 தகவல் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. உண்மை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை அக்., 28க்கு நீதிபதி முருகன் ஒத்தி வைத்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X