திருப்பூர் அருகே எரி சாராயம் கடத்தல் ஒருவர் கைது; இருவருக்கு வலை

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே எரிசாராயம் கடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, முத்தம்பாளையத்தில் எரி சாராயம் பதுக்கி வைத்து, வெளி மாவட்டத்துக்கு கடத்துவது குறித்து போலீசாருக்கு தெரிந்தது. 'சானிடைசர்' என்ற பெயரில், எரி சாராயத்தை கோவாவில் இருந்து ஊத்துக்குளிக்கு கடத்தி வந்து, பின், சிறிய கேன்களில் மாற்றம்

திருப்பூர்:திருப்பூர் அருகே எரிசாராயம் கடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, முத்தம்பாளையத்தில் எரி சாராயம் பதுக்கி வைத்து, வெளி மாவட்டத்துக்கு கடத்துவது குறித்து போலீசாருக்கு தெரிந்தது. 'சானிடைசர்' என்ற பெயரில், எரி சாராயத்தை கோவாவில் இருந்து ஊத்துக்குளிக்கு கடத்தி வந்து, பின், சிறிய கேன்களில் மாற்றம் செய்து வெளி மாவட்டத்துக்கு அனுப்பி வந்துள்ளனர்.இதுதொடர்பாக, ஏழு பேரை கைது செய்து, 1,750 லி., எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய தலா, இரு வேன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்படைய திருப்பூரை சேர்ந்த கார்த்திக், 42 என்பவரை நேற்று கைது செய்தனர்.


'பார்'களுக்கு சப்ளை?


போலீசார் கூறியதாவது:எரிசாராயம் கடத்தல் தொடர்பாக இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள, இருவரை தேடி வருகிறோம். கோவாவில் இருந்து ஊத்துக்குளிக்கு கொண்டு வரப்படும் எரிசாராயம், சிறிய கேன்களில் மாற்றப்பட்டு, அவை வேன்களில் ஏற்றி சென்று செங்கப்பள்ளியில் வாகனத்தை நிறுத்துகின்றனர்.அங்கு வரும் மற்றொரு கும்பல், வாகனத்தை எடுத்து சென்று வேறு இடத்தில் வைத்து, எரி சாராயம் மூலம் போலி மது தயார் செய்து பார்களுக்கு சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் 'சப்ளை' செய்துள்ளனர். பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X