போலீசார் மீது தாக்குதல் :தாராபுரத்தில் மூவர் கைது| Dinamalar

போலீசார் மீது தாக்குதல் :தாராபுரத்தில் மூவர் கைது

Added : செப் 24, 2022 | |
திருப்பூர்:தாராபுரத்தில், எஸ்.ஐ., மற்றும் போலீசை தாக்கிய, மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாலசுப்ரமணியம் நகரில், 'டாஸ்மாக்' மதுக்கடை பார் உள்ளது. இங்கு குண்டடத்தை சேர்ந்த பிரகாஷ், 30 என்பவர், வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு தாராபுரத்தை சேர்ந்த லட்சுமணன், அலாவுதீன், ரங்கநாதன் ஆகியோர் மது அருந்த சென்றனர். அப்போது, தின்பண்டம்

திருப்பூர்:தாராபுரத்தில், எஸ்.ஐ., மற்றும் போலீசை தாக்கிய, மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாலசுப்ரமணியம் நகரில், 'டாஸ்மாக்' மதுக்கடை பார் உள்ளது. இங்கு குண்டடத்தை சேர்ந்த பிரகாஷ், 30 என்பவர், வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு தாராபுரத்தை சேர்ந்த லட்சுமணன், அலாவுதீன், ரங்கநாதன் ஆகியோர் மது அருந்த சென்றனர். அப்போது, தின்பண்டம் 'சப்ளை' செய்வது தொடர்பாக, மூவரும், பிரகாஷிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து, தாராபுரம் எஸ்.ஐ., கருப்புசாமி, போலீஸ் வினோத்குமார், 27 ஆகியோர் அங்கு சென்றனர். தகராறு குறித்து விசாரித்தபோது, மூவரும் போலீஸ்காரர்கள் இருவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு, மிரட்டல் விடுத்தனர்.மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X