போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்; 41 பேர் மீது குற்றப்பத்திரிகை

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மதுரை : மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக 41 பேர் மீது 'கியூ பிராஞ்ச்' சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள்
Madurai, Fake documents, Passport, போலி ஆவணங்கள், பாஸ்போர்ட், கியூ பிராஞ்ச் சிஐடி, Q BRANCH CID, மதுரை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை : மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக 41 பேர் மீது 'கியூ பிராஞ்ச்' சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மதுரை வழக்கறிஞர் முருக கணேசன் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு:போலீசாரின் பல கட்ட ஆய்விற்கு பிறகே பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலி முகவரி, அடையாளச் சான்று மூலம் இலங்கை அகதிகள் சிலருக்கு 53 பாஸ்போர்ட்கள் 2019ல் வழங்கப்பட்டது.கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் 2019ல் வழக்குப் பதிந்தனர்.


latest tamil newsஇந்த விவகாரத்தில் பாஸ்போர்ட், தபால் துறை, காவல் துறையைச் சேர்ந்த சில அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளது.வழக்கு விசாரணையை சி.பி.ஐ., அல்லது வேறொரு அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்; பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுசெய்தார்.இந்த மனுவை, 2021 பிப்ரவரியில் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், 'விசாரணையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.
அதன் பின், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்த போது, மனுதாரர் தரப்பில், 'போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய சம்பந்தப்பட்ட காலத்தில் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது குறைகாண முடியாது. அவர் சுத்தமானவர் என தனிநீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.'இது ஏற்புடையதல்ல. தனி நீதிபதியின் உத்தரவிலுள்ள அப்பகுதியை நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்துள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக 41 பேர் மீது 'கியூ பிராஞ்ச்' சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், 'வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து 'கியூ பிராஞ்ச்' சி.ஐ.டி., போலீசார் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-செப்-202212:20:12 IST Report Abuse
Ramesh Sargam ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் 99 சதவிகிதம் பேர் போலி ஆவணங்கள் கொடுத்துதான் பாஸ்போர்ட் எடுப்பார்கள். அந்த சமூகம் யார் என்று நான் விலாவாரியாக கூற தேவை இல்லை. உங்களுக்கே தெரியும். அட, ஒரு பாஸ்போர்ட் இல்லை, ஒரு ஆள், பல பெயர்களில், பல நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்று நான் கூறினால் அது மிகையல்ல.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
24-செப்-202210:30:16 IST Report Abuse
Tamilnesan எந்த பத்திரிகை தாக்கல் செய்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. முன்பு, திமுக தலைவர் அன்பழகன் உறவினர் பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் தற்போது பல நூறு கோடிகளுடன் சுகமாக வாழ்ந்து வருகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு தண்டனைகள் கிடையாது. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel
24-செப்-202207:27:29 IST Report Abuse
எவர்கிங் அப்படியே ... பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X