டாக்டர், நர்ஸ்களை அரசு பலிகடா ஆக்குவதாக வேதனை

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மதுரை : பிரசவத்தின் போது தாயோ, சேயோ இறந்தால் டாக்டர், நர்ஸ்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பிரசவ மையங்களை குறைத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் மதுரையில் தெரிவித்தார்.டாக்டர்கள் செந்தில், அருள், பாப்பையா கூறியதாவது:4 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ஆரம்ப சுகாதார
டாக்டர், நர்ஸ், அரசு பலிகடா, வேதனை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை : பிரசவத்தின் போது தாயோ, சேயோ இறந்தால் டாக்டர், நர்ஸ்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பிரசவ மையங்களை குறைத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் மதுரையில் தெரிவித்தார்.டாக்டர்கள் செந்தில், அருள், பாப்பையா கூறியதாவது:

4 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ஆரம்ப சுகாதார மையம் வந்த கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்த போது குழந்தை தலைகீழாக திரும்பியிருந்ததால் அரசு மருத்துவனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டார். மறுநாள் மீண்டும் சுகாதார மையத்திற்கு வந்த நிலையில் 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை இறந்தது. பெண்ணின் உறவினர்கள் செய்த தவறால் டாக்டர், 2 நர்ஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு மாதம் முன் கடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிக்கலான பிரசவத்தில் குழந்தை இறந்ததற்காக 3 டாக்டர்கள், 2 நர்ஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


latest tamil news



இதுபோன்ற நடவடிக்கைகளில் டாக்டர், நர்ஸ்களை அரசு பலிகடா ஆக்குகிறது.மருத்துவமனையில் 100 சதவீத பிரசவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 3 'ஷிப்ட்'களிலும் நர்ஸ்கள் பிரசவம் பார்க்கும் வகையில் புதிய திட்டத்தை 2007 ல் அரசு கொண்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் 90 சதவீதம், ஆரம்ப சுகாதார மையங்களில் 10 சதவீதம் தான் பிரசவம் நடக்கிறது. அங்கு தான் சிக்கலான பிரசவங்கள், உயிரை காப்பாற்றக்கூடிய அவசியமான வாய்ப்புகள் தேவைப்படுகிறது. அதில் தான் நிறைய சிக்கல்கள் வருகின்றன. அதை குறைத்தாலே போதும்.




ரத்து செய்ய வேண்டும்

பிரசவத்தில் தாய் இறப்பு விகிதத்தை 2 சதவீதத்திற்கு கீழும் சேய் இறப்பு விகிதத்தை 13 க்கு கீழ் குறைத்து விட்டோம். இதற்கு மேல் குறைக்க வேண்டும் எனில் 2000 மையங்களில் பிரசவம் பார்ப்பதற்கு பதிலாக 150 மையங்களிலும், மகப்பேறு மருத்துவமனைகளிலும் கூடுதல் டாக்டர்களை நியமித்து அங்கு மட்டுமே பிரசவம் நடைபெற அரசு அனுமதிக்க வேண்டும்.

கடந்தாண்டு தமிழக அரசு மென்டார்' முறையை அறிமுகப்படுத்தியது. ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள நர்ஸ்களுக்கு அரசு மருத்துவமனையில் உள்ள 5 மகப்பேறு டாக்டர்களுடன் தொடர்பு கொண்டு பிரசவத்தின் போதான சிக்கல்களை தீர்க்க அலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. நர்ஸ்கள் டாக்டர்களிடம் போனில் தகவல் கேட்டால், டாக்டர்கள் பணிக்கு வராமல் ஏமாற்றுவதாக' கர்ப்பிணிகளின் உறவினர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். மகப்பேறு போன்ற அவசர மருத்துவத்திற்கான இந்த முறை மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது. இந்த முறையையும் ரத்து செய்ய வேண்டும் ,என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranithakannan - chennai,இந்தியா
24-செப்-202223:47:58 IST Report Abuse
ranithakannan அய்யா செந்தில் அவர்களே //நீங்கள் சொல்லுவது சரியா? பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்பிணி பெண்கள் மாதாந்திர செக்க்குப் மட்டுமே செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள் .நீங்கள் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் பகுதியில் கணக்கு எடுத்து பாருங்கள் சுமார் 3 லிருந்து5 சதவீதம் மட்டுமே அரசு மருத்துவமணியீல் பிரசவம் பார்க்கப்பட்டும் மீதம் முன்னுள்ள சில ஊழியர்களால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப் படுகின்றார்கள். தேசிய நல குழுமம் வழங்கும் நிதி மருத்துவர்களால் எப்படி கணக்கு காட்டப்படுகின்றது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ?ஆனால் மனச்சாட்சி உள்ள சில மருத்துவர்களும் உள்ளதால் காரோண தொற்றிலும் ஆயிர கணக்கான மக்கள் உயிர் பிழைத்ததை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன் அதே வேளையில் மருத்துவ விடுப்பில் என்று தனது மருத்துவமனையில் பணத்தை லட்ச கணக்கில் சம்பாரித்த மருத்துவர்களையும் என்னால் இனம் கட்ட முடியும் ஆகவே உங்கள் மருத்துவர்களில் பெரும்பாலானவர்களை வேலை செய்ய சொல்லுங்கள் நன்றி
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-செப்-202214:14:30 IST Report Abuse
vpurushothaman இவர்களுக்கு " மகிழ்ச்சி ".
Rate this:
Cancel
24-செப்-202213:58:32 IST Report Abuse
Balaji Radhakrishnan இனி தமிழக அரசால் செயல்படுத்த முடியாத துறையை மத்திய அரசு எடுத்து நடத்த வேண்டும். திமுக ஆட்சி தொடங்கி இன்று வரை எந்த துறையும் செயல்படுத்த இயலவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X