டாக்டர், நர்ஸ்களை அரசு பலிகடா ஆக்குவதாக வேதனை| Dinamalar

டாக்டர், நர்ஸ்களை அரசு பலிகடா ஆக்குவதாக வேதனை

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (9) | |
மதுரை : பிரசவத்தின் போது தாயோ, சேயோ இறந்தால் டாக்டர், நர்ஸ்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பிரசவ மையங்களை குறைத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் மதுரையில் தெரிவித்தார்.டாக்டர்கள் செந்தில், அருள், பாப்பையா கூறியதாவது:4 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ஆரம்ப சுகாதார
டாக்டர், நர்ஸ், அரசு பலிகடா, வேதனை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை : பிரசவத்தின் போது தாயோ, சேயோ இறந்தால் டாக்டர், நர்ஸ்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பிரசவ மையங்களை குறைத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் மதுரையில் தெரிவித்தார்.டாக்டர்கள் செந்தில், அருள், பாப்பையா கூறியதாவது:4 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ஆரம்ப சுகாதார மையம் வந்த கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்த போது குழந்தை தலைகீழாக திரும்பியிருந்ததால் அரசு மருத்துவனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டார். மறுநாள் மீண்டும் சுகாதார மையத்திற்கு வந்த நிலையில் 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை இறந்தது. பெண்ணின் உறவினர்கள் செய்த தவறால் டாக்டர், 2 நர்ஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு மாதம் முன் கடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிக்கலான பிரசவத்தில் குழந்தை இறந்ததற்காக 3 டாக்டர்கள், 2 நர்ஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


latest tamil newsஇதுபோன்ற நடவடிக்கைகளில் டாக்டர், நர்ஸ்களை அரசு பலிகடா ஆக்குகிறது.மருத்துவமனையில் 100 சதவீத பிரசவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 3 'ஷிப்ட்'களிலும் நர்ஸ்கள் பிரசவம் பார்க்கும் வகையில் புதிய திட்டத்தை 2007 ல் அரசு கொண்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் 90 சதவீதம், ஆரம்ப சுகாதார மையங்களில் 10 சதவீதம் தான் பிரசவம் நடக்கிறது. அங்கு தான் சிக்கலான பிரசவங்கள், உயிரை காப்பாற்றக்கூடிய அவசியமான வாய்ப்புகள் தேவைப்படுகிறது. அதில் தான் நிறைய சிக்கல்கள் வருகின்றன. அதை குறைத்தாலே போதும்.
ரத்து செய்ய வேண்டும்

பிரசவத்தில் தாய் இறப்பு விகிதத்தை 2 சதவீதத்திற்கு கீழும் சேய் இறப்பு விகிதத்தை 13 க்கு கீழ் குறைத்து விட்டோம். இதற்கு மேல் குறைக்க வேண்டும் எனில் 2000 மையங்களில் பிரசவம் பார்ப்பதற்கு பதிலாக 150 மையங்களிலும், மகப்பேறு மருத்துவமனைகளிலும் கூடுதல் டாக்டர்களை நியமித்து அங்கு மட்டுமே பிரசவம் நடைபெற அரசு அனுமதிக்க வேண்டும்.கடந்தாண்டு தமிழக அரசு மென்டார்' முறையை அறிமுகப்படுத்தியது. ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள நர்ஸ்களுக்கு அரசு மருத்துவமனையில் உள்ள 5 மகப்பேறு டாக்டர்களுடன் தொடர்பு கொண்டு பிரசவத்தின் போதான சிக்கல்களை தீர்க்க அலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. நர்ஸ்கள் டாக்டர்களிடம் போனில் தகவல் கேட்டால், டாக்டர்கள் பணிக்கு வராமல் ஏமாற்றுவதாக' கர்ப்பிணிகளின் உறவினர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். மகப்பேறு போன்ற அவசர மருத்துவத்திற்கான இந்த முறை மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது. இந்த முறையையும் ரத்து செய்ய வேண்டும் ,என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X