'ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வந்தது': பா.ஜ., சாடல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-'காங்கிரஸ், ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்ததோ என நினைக்கும் வகையில், சித்தராமையா தலைமையிலான அரசு ஆட்சி நடத்தியது' என பா.ஜ., சாடியுள்ளது.இது குறித்து, 'டுவிட்டரில்' நேற்று பா.ஜ., கூறியிருப்பதாவது:ஊழல்களை மாலையாக கழுத்தில் அணிந்து நடமாடிய பெருமை, சித்தராமையாவை சாரும். இவரது ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும், ஊழல் நடந்தது.ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்,



பெங்களூரு-'காங்கிரஸ், ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்ததோ என நினைக்கும் வகையில், சித்தராமையா தலைமையிலான அரசு ஆட்சி நடத்தியது' என பா.ஜ., சாடியுள்ளது.

இது குறித்து, 'டுவிட்டரில்' நேற்று பா.ஜ., கூறியிருப்பதாவது:ஊழல்களை மாலையாக கழுத்தில் அணிந்து நடமாடிய பெருமை, சித்தராமையாவை சாரும். இவரது ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும், ஊழல் நடந்தது.ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இரும்பு மேம்பாலம் கட்டியதில் கமிஷன், பெங்களூரு மாநகராட்சியில், 1,400 கோடி ரூபாய் முறைகேடு கமிஷன், அன்னபாக்யா அரிசி திருட்டு, அர்க்காவதி நில மறு அறிவிப்பு, தலையணை வாங்கியதில் ஊழல், கல் குவாரி, மணல் மாபியா என மற்ற விஷயங்களில் சித்தராமையா பெற்ற கமிஷன் எவ்வளவு.நாகார்ஜுனா நிறுவனத்திடம், 15 சதவீதம் கமிஷன் பெற்று, இரும்பு மேம்பாலம் கட்ட முற்பட்ட விஷயம், கோவிந்தராஜ் டைரியில் வெளிச்சத்துக்கு வந்தது மறந்துவிட்டதா. சித்தராமையா ஆட்சியில், காங்கிரஸ் அரசு 100 சதவீதம் கமிஷன் அரசாக இருந்தது என்பதற்கு, இதைவிட வேறு சாட்சியம் தேவையா.காங்கிரஸ், ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்ததோ என நினைக்கும் வகையில், சித்தராமையா தலைமையிலான அரசு, ஆட்சி நடத்தியது.காங்கிரஸ் ஆட்சியின், பல முறைகேடுகள் தொடர்பான புத்தகத்தை, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டார். பா.ஜ.,வின் வளர்ச்சி திட்டங்களால், பீதியில் உள்ள சித்தராமையா, பொய் சொல்லி மக்களை திசை திருப்புகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X