துப்புரவு தொழிலாளர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்ட முதல்வர்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-துப்புரவு தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி பரிமாறிய முதல்வர் பசவராஜ் பொம்மை, அவர்களுடன் அமர்ந்து தானும்சாப்பிட்டார்.பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு உள்ளாட்சிகளில் பணி புரியும், 11 ஆயிரத்து 137 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க கர்நாடக அரசு தீர்மானித்தது. இதையடுத்து, பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் நேற்று
துப்புரவு தொழிலாளர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்ட முதல்வர்



பெங்களூரு-துப்புரவு தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி பரிமாறிய முதல்வர் பசவராஜ் பொம்மை, அவர்களுடன் அமர்ந்து தானும்சாப்பிட்டார்.

பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு உள்ளாட்சிகளில் பணி புரியும், 11 ஆயிரத்து 137 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க கர்நாடக அரசு தீர்மானித்தது. இதையடுத்து, பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் நேற்று துப்புரவு தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.அப்போது, அவர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை சிற்றுண்டி பரிமாறி, அவரும் அமர்ந்து சாப்பிட்டார். அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், சி.சி.பாட்டீல், கோட்டா சீனிவாச பூஜாரி, மாநில துப்புரவு தொழிலாளர்கள் ஆணைய தலைவர் சிவண்ணா ஆகியோரும் சிற்றுண்டி சாப்பிட்டனர்.பின், பசவராஜ் பொம்மை கூறியதாவது:முதல் கட்டமாக, 11 ஆயிரத்து 137 துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர். மொத்தம் உள்ள 43 ஆயிரம் தொழிலாளர்களும் நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.அரசின் முடிவால் அவர்கள் மனதில் ஆத்ம நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நாட்களாக நாம் பட்ட கஷ்டத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்று நினைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X