முருகா மடாதிபதியின்ஜாமின் மனு தள்ளுபடி

Added : செப் 24, 2022 | |
Advertisement
சித்ரதுர்கா-முருகா மடத்தின் மடாதிபதி முருகா சரணருக்கு ஜாமின் வழங்க சித்ரதுர்கா அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 64 மீது இரண்டு மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி, 'போக்சோ' வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மடாதிபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு
முருகா மடாதிபதியின்ஜாமின் மனு தள்ளுபடி



சித்ரதுர்கா-முருகா மடத்தின் மடாதிபதி முருகா சரணருக்கு ஜாமின் வழங்க சித்ரதுர்கா அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.

சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 64 மீது இரண்டு மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி, 'போக்சோ' வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மடாதிபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை, நேற்று சித்ரதுர்காவில் உள்ள இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. மடாதிபதியை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு இதய பாதிப்பு இருந்ததால், ஷிவமொகாவில் உள்ள மெக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.'தற்போது, அவரது ஆரோக்கியம் நன்றாக உள்ளது. பிரச்னை ஏதும் இல்லை' என டாக்டர்கள் தெரிவித்ததால், நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X