ராய்ச்சூர் மாவட்ட கிராமத்தில்அக்., 15ல் தங்குகிறார் அசோக்| Dinamalar

ராய்ச்சூர் மாவட்ட கிராமத்தில்அக்., 15ல் தங்குகிறார் அசோக்

Added : செப் 24, 2022 | |
ராய்ச்சூர்-வருவாய்த் துறை அமைச்சர் அசோக், அக்டோபர் 15ல், ராய்ச்சூரின் அரகேரா கிராமத்தில் தங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அந்தந்த கிராமங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், 'மாவட்ட கலெக்டர்களின் நடை, கிராமங்களை நோக்கி' என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் கிராமங்களில் தங்கி,
ராய்ச்சூர் மாவட்ட கிராமத்தில்அக்., 15ல் தங்குகிறார் அசோக்

ராய்ச்சூர்-வருவாய்த் துறை அமைச்சர் அசோக், அக்டோபர் 15ல், ராய்ச்சூரின் அரகேரா கிராமத்தில் தங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



அந்தந்த கிராமங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், 'மாவட்ட கலெக்டர்களின் நடை, கிராமங்களை நோக்கி' என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் கிராமங்களில் தங்கி, பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண்பர்.வருவாய்த் துறை அமைச்சர் அசோக், அக்டோபர் 15ல், ராய்ச்சூரின் அரகேரா கிராமத்தில் தங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.அதிகாரிகள் கூட்டத்தில், ராய்ச்சூர் கலெக்டர் துருகேஷ் கூறியதாவது:அக்டோபர் மூன்றாம் சனிக்கிழமை, அரகேரா கிராமத்தில் காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை, கிராமத்தில் அமைச்சர் அசோக் இருப்பார். இங்குள்ள குடிநீர் பிரச்னை, சமுதாய பவன், அங்கன்வாடி கட்டடம் உட்பட மற்ற பிரச்னைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தகுதியான பயனாளிகளுக்கு பென்ஷன் வசதி கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும. ஆதார் கார்டுகளின் பயன்கள் குறித்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும்.வருவாய்த்துறை அமைச்சர் அசோக் வருவதால், அனைத்து துறைகளின் அதிகாரிகள், கிராமத்தில் முகாமிட்டு, தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.பண்டிகை சூழலை ஏற்படுத்த வேண்டும். கிராமத்தினர், பெண்கள், அமைச்சருக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை அமைச்சர் கேட்டறிவார்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X