சின்ன சின்னதாய்...| Dinamalar

சின்ன சின்னதாய்...

Added : செப் 24, 2022 | |
சின்ன சின்னதாய்பிரேம் சந்த் ஜெயின் படம் திறப்புமூத்த காங்கிரஸ் தலைவரும், தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவருமான ரமேஷ் ஜெயின் தந்தை பிரேம் சந்த் ஜெயின் 72, இம்மாதம் 21ல் காலமானார். இவரின்படத்திறப்பு, இரங்கல் நிகழ்ச்சி நேற்று ராபர்ட்சன் பேட்டையில் நடந்தது.கோலார் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி., முனியப்பா, பிளாக் காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, நகராட்சி உறுப்பினர்கள்,சின்ன சின்னதாய்

பிரேம் சந்த் ஜெயின் படம் திறப்புமூத்த காங்கிரஸ் தலைவரும், தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவருமான ரமேஷ் ஜெயின் தந்தை பிரேம் சந்த் ஜெயின் 72, இம்மாதம் 21ல் காலமானார். இவரின்படத்திறப்பு, இரங்கல் நிகழ்ச்சி நேற்று ராபர்ட்சன் பேட்டையில் நடந்தது.கோலார் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி., முனியப்பா, பிளாக் காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, நகராட்சி உறுப்பினர்கள், தங்கவயல் காங்கிரஸ் பிரமுகர்கள், ஜெயின் சங்கத்தினர், வியாபாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதிதங்கவயல் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத், 61, உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரின் மருத்துவ செலவு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானது.கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க கோரிக்கையை ஏற்று, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.பள்ளி வெள்ளி விழாகோலார் எம்.ஜி., சாலையில் உள்ள செயின்ட் ஆன்ஸ் ஆங்கில உயர் நிலைப் பள்ளியின் 25 ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 1996- - 97 ன் மாணவர்கள் பங்கேற்றனர். தங்களின் ஆசிரிய - ஆசிரியைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பழைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தற்போதைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.விவசாய சங்க ஆண்டு விழாவிவசாய சேவை கூட்டுறவுச் சங்கம் மூலம் வட்டியில்லா கடனுதவி பெற்றவர்கள் திருப்பி செலுத்தி வருகின்றனர் என்று அதன் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.பங்கார்பேட்டை பூதிக்கோட்டையில் உள்ள விவசாய சேவை கூட்டுறவுச் சங்க ஆண்டு விழா, நேற்று நடந்தது.அவர் பேசுகையில், ''நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாமல் போயிருந்தால் கடனுதவி பெற மிகவும் கஷ்டப் பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நமது சங்கத்தில், தலா 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. அவைகளை திருப்பி செலுத்தி மறுபடியும் கடனுதவி பெறலாம். நமது சங்க உறுப்பினர்கள் தவறாமல் பணம் செலுத்தி வருகின்றனர்,'' என்றார்.மரக்கன்று வளர்ப்பு விழிப்புணர்வுகோலாரின் பூவண்டஹள்ளி கிராமத்தில் உள்ள, அரசுப் பள்ளி வளாகத்தில்மரக் கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.பூவண்டஹள்ளி கிராம சமூக ஆர்வலர்கள் பலவித மரக்கன்றுகள் நட்டனர். மரங்களின் பலன் குறித்து சமூக ஆர்வலர் ஷ்யாம் மாணவர்களுக்கு விளக்கினார்.அவர் கூறுகையில், ''கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது சுவாசக் காற்று மிகவும் தேவைப்பட்டது. இயற்கையில் மரங்கள் தான்பிராண வாயு வழங்குகிறது. எனவே மரக்கன்றுகளை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.பி.எப்.ஐ., தொண்டர்கள் கைதுகர்நாடகாவில் பல்வேறு இடங்களில்நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவு அதிரடி சோதனை நடத்தினர். பலரை கைது செய்தனர். முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து பி.எப்.ஐ., அமைப்பினர் கோலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார், நேற்று கைது செய்தனர்.தலித் அமைப்பினர் தர்ணாமாலுார் உள்ளேரஹள்ளி கிராமத்தில் தலித் மாணவனுக்கு எதிராக நடந்த தீண்டாமை சம்பவத்தை கண்டித்து கோலார் மாவட்ட தலித் அமைப்பினர், கோலார் தாலுகா அலுவலகம் முன் நேற்று தர்ணா நடத்தினர். கோலார் தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.துப்புரவு பணியாளர் தின விழாகோலார் சென்னையா கலையரங்கில், துப்புரவு பணியாளர் தின விழா நேற்று நடந்தது.துப்புரவுப் பணியாளர்களின் சேவையை பாராட்டி, நகராட்சி தலைவர் ஸ்வேதா கவுரவித்தார். அதிகாலையில் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தினமும் டீ, காபி வழங்கப்படும். அவர்களின் நலனுக்காக மருத்துவ உதவி வழங்கப்படும். பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.* தங்கவயலில் துப்புரவு தொழிலாளர் தின விழா நேற்று நடந்தது. துப்புரவுப் பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி ஆணையர் மாதவி, நகராட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X