சித்தராமோற்சவா வெற்றி விழா2,000 பேருக்கு கறி விருந்து | Dinamalar

சித்தராமோற்சவா வெற்றி விழா2,000 பேருக்கு 'கறி விருந்து' 

Added : செப் 24, 2022 | |
பெங்களூரு-சித்தராமோற்சவா விழா வெற்றிக்காக, முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று 2,000 பேருக்கு கறி விருந்து வைத்தார்.முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தாவணகரேயில் சித்தராமோற்சவா் கொண்டாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உட்பட தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். இது



பெங்களூரு-சித்தராமோற்சவா விழா வெற்றிக்காக, முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று 2,000 பேருக்கு கறி விருந்து வைத்தார்.முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தாவணகரேயில் சித்தராமோற்சவா் கொண்டாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உட்பட தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். இது சித்தராமையாவின் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சித்தராமோற்சவா வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் பெங்களூரு கொடவா சமுதாய பவனில் சித்தராமையா நேற்று கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு விருந்து வைத்தார். இதில், 2,000 பேருக்கும் மேல் வந்திருந்தனர். அனைவருக்கும் சிக்கன், மட்டன் என விதவிதமான 'அசைவ உணவு' பரிமாறப்பட்டது. இந்த விருந்துக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X