கிரைம் கார்னர்| Dinamalar

கிரைம் கார்னர்

Added : செப் 24, 2022 | |
போதைப்பொருள் விற்ற மூவர் கைதுபெங்களூரின், பல இடங்களில் கல்லுாரி மாணவர்களுக்கு, போதைப்பொருள் விற்று வந்த சாஹித், 34, ஜிதின், 32, சிஹாஜ், 35, ஆகியோரை எச்.எஸ்.ஆர்., லே -- அவுட் போலீசார் கைது செய்தனர். 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.விபத்தில் மாணவி பலிபெங்களூரின் கொட்டிகேபாளையாவின், 'பெக்கர் காலனி' அருகில் நேற்று முன் தினம் நள்ளிரவு சென்ற



போதைப்பொருள் விற்ற மூவர் கைது

பெங்களூரின், பல இடங்களில் கல்லுாரி மாணவர்களுக்கு, போதைப்பொருள் விற்று வந்த சாஹித், 34, ஜிதின், 32, சிஹாஜ், 35, ஆகியோரை எச்.எஸ்.ஆர்., லே -- அவுட் போலீசார் கைது செய்தனர். 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.விபத்தில் மாணவி பலிபெங்களூரின் கொட்டிகேபாளையாவின், 'பெக்கர் காலனி' அருகில் நேற்று முன் தினம் நள்ளிரவு சென்ற ஸ்கூட்டர் மீது, டிப்பர் லாரி மோதியது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவி சுசித்ரா, 17, உயிரிழந்தார். தந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.ஸ்கூட்டர் கவிழ்ந்து ஒருவர் பலிமும்பையை சேர்ந்த அனில்குமார், 50, பெங்களூரில் வசித்தார். கூரியர் நிறுவனம் நடத்திய இவர், நேற்று அதிகாலை, சர்வீஸ் சாலையின், வெங்கடாலா அருகில், ஸ்கூட்டரில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் உருண்டது. இதில் அவர் உயிரிழந்தார்.கிணற்றில் விழுந்து உயிரிழந்த ஏட்டுகொப்பாலின், கனககிரி போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றியவர் சிவபுத்ரப்பா குளேதகுட்டா, 40, இவர் நேற்று மாலை, ஏ.பி.எம்.சி., வளாகத்தில் உள்ள, வெங்கடபதி கிணற்றின் அருகில் ஓய்வெடுக்க சென்ற போது, கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.குடும்ப பிரச்னையால் கணவர் தற்கொலைதுமகூரு கொரட்டகரேவின், பைஜாபுரா கிராமத்தின், பசவனஹள்ளியில் வசித்தவர் தேவராஜ், 32. இவருக்கும், இவரது மனைவிக்கும், ஒற்றுமை இல்லாமல் அவ்வப்போது சண்டை போட்டனர். மனம் நொந்த தேவராஜ், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X