'பேசிஎம்' போஸ்டர் ஒட்டி போராட்டம்காங்., தலைவர்கள் கைதாகி விடுதலை

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-'பேசிஎம்'போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்களை போலீசார் நேற்று கைது செய்து, விடுதலை செய்தனர்.காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் கமிஷனை குற்றச்சாட்டை கண்டித்து 'பேசிஎம்' என்ற பெயரில் முதல்வர் படத்துடன் கூடிய போஸ்டர்கள் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதை போலீசார் கிழித்து எறிந்ததால் நானே போஸ்டர் ஒட்டுவேன் என நேற்று முன்தினம் மாநில



பெங்களூரு-'பேசிஎம்'போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்களை போலீசார் நேற்று கைது செய்து, விடுதலை செய்தனர்.காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் கமிஷனை குற்றச்சாட்டை கண்டித்து 'பேசிஎம்' என்ற பெயரில் முதல்வர் படத்துடன் கூடிய போஸ்டர்கள் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதை போலீசார் கிழித்து எறிந்ததால் நானே போஸ்டர் ஒட்டுவேன் என நேற்று முன்தினம் மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் அறிவித்தார். அதன்படி நேற்று பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள முதல்வர் பசவராஜ் பொம்மையின் அலுவலக இல்லம் முன் போஸ்டர் ஒட்டும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ரேஸ் கோர்ஸ் சாலை, முதல்வர் அலுவலக இல்லத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஆனாலும் பாதுகாப்பை மீறி காங்கிரஸ் தலைலவர்கள் போஸ்டர் ஒட்டினர். மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் பசை தடவ, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போஸ்டர் ஒட்டினார். இதை அங்கிருந்த போலீசார் கிழித்தனர். இதனால் அங்கு போலீசார், காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர். அவர்களை முதலில் ஒரு பி.எம்.டி.சி., பஸ்சில் ஏற்றினர். அந்த பஸ்சில் பிரேக் இல்லை என்பதை அறிந்த டிரைவர், அவர்களை கீழே இறக்கி விட்டார். பின் வேறு பஸ்சில் ஏற்றி, ஆடுகோடி ஆயுத படை மைதானத்துக்கு அழைத்து சென்று, பின் விடுதலை செய்யப்பட்டனர்.போஸ்டர் போராட்டத்தை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X