என்.ஐ.ஏ., ரெய்டில் 14 பேர் அதிரடி கைது; வலையில் சிக்கிய பரபரப்பு பின்னணி

Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பெங்களூரு-கே.ஜி., ஹள்ளி வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த, 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிடித்த சுவாரஸ்மான தகவல் வெளியாகியுள்ளது.தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின்



பெங்களூரு-கே.ஜி., ஹள்ளி வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை பிடித்த சுவாரஸ்மான தகவல் வெளியாகியுள்ளது.தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு பிரிவினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி வன்முறை தொடர்பாக பி.எப்.ஐ., பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.அதன்படி, தேசிய புலனாய்வு பிரிவினருடன், பெங்களூரு போலீசாரும் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். அதிரடி சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு - நாசீர் பாஷா, மன்சூர் அகமது; கலபுரகி - ஷேக் இஜாஜ் அலி; மைசூரு - முகமகது கலிமுல்லா; மங்களூரு - முகமது அஷ்ரப் அங்கஜல், முகமது ஷெரீப், மொய்தீன், நவாஜ் காவூர், அஷ்ரப்; புத்துார் - அப்துல் காதர், அப்துல் ரஜாக், ஆயுப்; பண்ட்வாள் - முகமது தப்சீர்; ஷிவமொகா - ஷாஹிப் கான்; தாவணகரே - தாஹிர், இமாதுத்தின்; சிர்ஷி - அப்துல் அஜீஜ் அப்துல், மவுசின் அப்துல் சாகுர்; கங்காவதி - முகமது பயாஜ் ஆகிய 19 பேர் மீது கே.ஜி.ஹள்ளி போலீசில் பட்டியலிட்டு, கடைசி ஐவர் தவிர, மற்றவர்கள் போலீஸ் வீசிய வலையில் சிக்கினர்.இவர்களை நேற்று மதியம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, பத்து நாட்கள் காவலில் எடுக்கப்பட்டனர். கே.ஜி., ஹள்ளி, புலிகேசிநகர் போலீஸ் நிலையங்களில் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள், கைது செய்வதற்கு ரகசிய திட்டம் தீட்டியதே சுவாரஸ்யம் தான்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் வருவதை அறிந்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி, 21ம் தேதி நள்ளிரவு உளவு துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.அதன் பின், துணை கமிஷனர்கள் சரணப்பா, பீமாசங்கர் குலேத், சீனிவாஸ் உட்பட 19 பேர் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களுடன், 100க்கும் அதிகமான இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுக்கள் ஆகியோரை நள்ளிரவு 3:00 மணிக்கு தனி தனி குழுவாக பிரித்து குறிப்பிட்ட இடத்தில் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. கமிஷனரிடம் இருந்து தகவல் பறந்ததும் அதிகாலை 3:30 மணியளவில் பி.எப்.ஐ., பிரமுகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.இதில் பலருக்கு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஐந்து பேரை கைது செய்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுஉள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
24-செப்-202217:43:32 IST Report Abuse
P.Sekaran நமது நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதற்கு பண்ணாட்டு சக்திகள் முயற்சிகிறது. இவர்களை வேரோடு களைய வேண்டும் இப்பொழுதுதான் இந்தியா உலகநாடுகளில் மூன்றாவதாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இதை பொறுக்காத சமூக விரோத சக்திகள் நமது நாட்டில் சதிதிட்டம் தீட்டுகிறது. இதற்கு கட்சி பாகுபாடின்றி எல்லோரும் இவர்கள் வளர்வதை தடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X