போலி சான்றிதழ் வழக்கில்தவறு செய்தோர் மீது நடவடிக்கை| Dinamalar

போலி சான்றிதழ் வழக்கில்தவறு செய்தோர் மீது நடவடிக்கை

Added : செப் 24, 2022 | |
பெங்களூரு-''போலி ஜாதி சான்றிதழ் வழக்கில், மாநிலம் முழுதும் 1,153 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 706 அரசு பதவிகள் அடங்கும். தவறு செய்தோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.கர்நாடக சட்டமேலவையில், நேற்று நடந்த விவாதம்:காங்., -- ரமேஷ்: போலியான ஜாதி சான்றிதழ் பெற்றவர்கள் மீது, என்ன நடவடிக்கை



பெங்களூரு-''போலி ஜாதி சான்றிதழ் வழக்கில், மாநிலம் முழுதும் 1,153 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 706 அரசு பதவிகள் அடங்கும். தவறு செய்தோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.



கர்நாடக சட்டமேலவையில், நேற்று நடந்த விவாதம்:காங்., -- ரமேஷ்: போலியான ஜாதி சான்றிதழ் பெற்றவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி: பெங்களூரு நகர் மற்றும் ரூரலில், போலியான ஜாதி சான்றிதழ் தொடர்பாக, 76 வழக்குகள் பதிவாகியுள்ளன. 36 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 21 வழக்குகள், மாவட்ட அளவிலான ஜாதி பரிசீலனை கமிட்டி முன்பாக உள்ளன.விசாரணை கட்டத்தில், 19 வழக்குகள் உள்ளன. சில வழக்குகள் பதிவாகி, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், நீதிமன்றத்துக்கே வரவில்லை. இதுபற்றி ஆய்வு செய்யப்படும்.போலியான ஜாதி சான்றிதழ் வழக்கில், மாநிலம் முழுதும் 1,153 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 706 அரசு பதவிகள் அடங்கும். தவறு செய்தோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X