அஸ்வத் நாராயணா ராஜினாமா கோரி ம.ஜ.த., அமளி; காலவரையின்றி சட்டசபை, மேலவை ஒத்தி வைப்பு| Dinamalar

அஸ்வத் நாராயணா ராஜினாமா கோரி ம.ஜ.த., அமளி; காலவரையின்றி சட்டசபை, மேலவை ஒத்தி வைப்பு

Added : செப் 24, 2022 | |
பெங்களூரு-''பி.எம்.எஸ்., கல்லுாரி முறைகேட்டில் தொடர்புடைய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயாணா பதவி விலக வேண்டும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என வலியுறுத்தி நேற்று சட்டசபையில் ம.ஜ.த.,வினர் அமளியில் ஈடுபட்டனர்.பெங்களூரு பி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை முறைகேட்டில் உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கு தொடர்புள்ளது, என
அஸ்வத் நாராயணா ராஜினாமா கோரி ம.ஜ.த., அமளி; காலவரையின்றி சட்டசபை, மேலவை ஒத்தி வைப்பு

பெங்களூரு-''பி.எம்.எஸ்., கல்லுாரி முறைகேட்டில் தொடர்புடைய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயாணா பதவி விலக வேண்டும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என வலியுறுத்தி நேற்று சட்டசபையில் ம.ஜ.த.,வினர் அமளியில் ஈடுபட்டனர்.



பெங்களூரு பி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை முறைகேட்டில் உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கு தொடர்புள்ளது, என நேற்று முன்தினம் ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி சட்ட சபையில் குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார். அஸ்வத் நாராயணா பதவி விலக கோரி போராட்டம் நடத்தினர். முதல்வர் பசவராஜ் பொம்மை, சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கோரிக்கையை ஏற்று இரவில் கைவிடப்பட்டது. நேற்று மீண்டும் போராட்டத்தை தொடர முடிவு செய்தனர்.இதன்படி நேற்று சட்ட சபை கூட்டம் துவங்கியதும், ம.ஜ.த.,வினர் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் அஸ்வத் நாராயணா, ஆளுங் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தை கைவிடுமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். இதை அவர்கள் ஏற்கவில்லை. விசாரணை வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர்.கூச்சல் குழப்பத்துக்கு இடையே முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், “விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் முடிவில் இருந்து நாங்கள் பின் வாங்க போவதில்லை,” என்றார்.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா: ம.ஜ.த.,வினரின் போராட்டம் தீவிரமாக உள்ளது. இதனால் எங்களால் விவாதம் நடத்த முடியவில்லை. சபாநாயகர் அவையை 10 நிமிடம் ஒத்தி வைத்து அவர்களுடன் சமாதானப்படுத்த வேண்டும். அதன்படி சபாநாயகர் எதிர்க்கட்சியினரை அழைத்து தன் அறையில் பேச்சு நடத்தினார். அப்போது ம.ஜ.த.,வினர் விசாரணை நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடித்ததால் பேச்சு தோல்வி அடைந்தது.மீண்டும் பகல் 12:00 மணிக்கு சட்டசபை கூடியதும் ம.ஜ.த., போராட்டம் தொடர்ந்தது. சபாநாயகர் கூறியும் கேட்கவில்லை.அமைச்சர் அஸ்வத் நாராயணா: ம.ஜ.த.,வினர் பொய் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இது குறித்து விசாரணை நடத்தும் பேச்சுக்கு இடமில்லை. இந்த வேளையில் ம.ஜ.த.,வினரின் குரல் அதிகமானது.சித்தராமையா: நாங்கள் 40 சதவீதம் கமிஷன் குறித்து பேசலாம் என்றிருந்தோம். ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். எனவே சட்டசபையை திங்கட்கிழமை ஒருநாள் நடத்த வேண்டும். இதற்கு அரசு ஒப்பு கொள்ளவில்லை. கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் சபாநாயகர், கேள்வி நேர விவாதத்தின் பதில்களை தாக்கல் செய்தார். இத்துடன் பி.எம்.டி.சி., மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, சபாநாயகர் நவராத்திரி விழா வாழ்த்துகளை கூறி சட்டசபைபை காலவரையின்றி ஒத்தி வைத்தார். இது போன்று மேலவையும் ஒத்தி வைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X