3000 பித்ருக்களுக்கு தனி மனிதர் தர்ப்பணம்| Dinamalar

3000 பித்ருக்களுக்கு தனி மனிதர் தர்ப்பணம்

Added : செப் 24, 2022 | கருத்துகள் (18) | |
நாகப்பட்டினம் : ஆதரவற்ற நிலையில் இறந்த 3 ஆயிரம் நபர்களை தனி மனிதராக அடக்கம் செய்த சமூக சேவகர் மகாளய பட்சத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் ஐதீக முறைப்படி 'திதி' அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நாகையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 64. ஜாதி மதம் பாராமல் 2012 முதல் ஆதரவற்றோர் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்கிறார்.இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள் பெண்கள்
நாகப்பட்டினம், பித்ருக்கள், மகாளய அமாவாசை, Nagapattinam, Mahalaya Amavasai,

நாகப்பட்டினம் : ஆதரவற்ற நிலையில் இறந்த 3 ஆயிரம் நபர்களை தனி மனிதராக அடக்கம் செய்த சமூக சேவகர் மகாளய பட்சத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் ஐதீக முறைப்படி 'திதி' அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாகையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 64. ஜாதி மதம் பாராமல் 2012 முதல் ஆதரவற்றோர் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்கிறார்.இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என 3000த்திற்கும் மேற்பட்ட உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் செப்., 25ல் மகாளய அமாவாசை வருவதோடு அதற்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்பதால் தான் அடக்கம் செய்த 3000த்திற்கும் மேற்பட்ட முன்னோர்களுக்கு உறவாக இருந்து ஒரே இடத்தில் திதி அளிக்க ராஜேந்திரன் முடிவு செய்தார்.அதன்படி நாகை புதிய கடற்கரையில் ஐதீக முறைப்படி குடும்பத்தினருடன் திதி அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X