பாலியல் பலாத்கார வழக்குவாலிபருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

பாலியல் பலாத்கார வழக்குவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 24, 2022 | |
விழுப்புரம்-பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, அரசூரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் விக்னேஷ், 22; பைனான்ஸ் தொகை வசூலிக்கும் ஊழியர். இவருக்கும் உளுந்துார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.விக்னேஷ்
பாலியல் பலாத்கார வழக்குவாலிபருக்கு 10 ஆண்டு சிறை



விழுப்புரம்-பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, அரசூரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் விக்னேஷ், 22; பைனான்ஸ் தொகை வசூலிக்கும் ஊழியர். இவருக்கும் உளுந்துார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.விக்னேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு திருமணத்திற்கு விக்னேஷ் மறுத்து மிரட்டியுள்ளார்.இதுகுறித்து அப் பெண், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், விக்னேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ்க்கு, பாலியல் பலாத்காரம் பிரிவின் கீழ் 9 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும். நம்பிக்கை மோசடிக்கு ஒரு ஆண்டு சிறையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X