ரயிலில் கஞ்சா கடத்திய வழக்கு; 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

Added : செப் 24, 2022 | |
Advertisement
விழுப்புரம்-ஆந்திராவில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.விழுப்புரம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஏ.எஸ்.பி. மார்ட்டின் ராபர்ட் தலைமையிலான போலீசார் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது,



விழுப்புரம்-ஆந்திராவில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஏ.எஸ்.பி. மார்ட்டின் ராபர்ட் தலைமையிலான போலீசார் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்கள், 2 மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை மேட்டத்துாரைச் சேர்ந்த ஏழுமலை, 34; செல்லான், 60; என்பதும், இருவரும் ஆந்திரா, விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி, ஹவுரா ரயில் மூலம் விழுப்புரத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது.இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை விழுப்புரம் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பராயலு ஆஜரானார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலை, செல்லான் இருவருக்கும் நேற்று, தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X