2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது| Dinamalar

2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது

Added : செப் 24, 2022 | |
வானுார்-வானுார் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து மொபைல் போன்கள் மற்றும் பணம் திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் கிேஷார், 23; இவர், அப்பகுதியில் ஜெ.எஸ்.ஆர்., என்ற பெயரில் மொபைல் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை
2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது

வானுார்-வானுார் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து மொபைல் போன்கள் மற்றும் பணம் திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் கிேஷார், 23; இவர், அப்பகுதியில் ஜெ.எஸ்.ஆர்., என்ற பெயரில் மொபைல் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை வைத்துள்ளார்.கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; இவர், சக்தி என்ற பெயரில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இருவரது கடைகளும் அருகருகே உள்ளன.கடந்த 20ம் தேதி இரவு, 2 கடைகளின் பூட்டை உடைத்து, மொபல் போன் கடையில் இருந்து 37 மொபைல் போன்கள், 4 ஸ்மார்ட் வாட்ச்சுகள், எலட்ரானிக் பொருட்கள் மற்றும், மெடிக்கலில் 30 ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., மித்ரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.சி.சி.டி.வி., கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், 2 நபர்கள், கடையின் ெஷட்டரை உடைத்து திருடிக்கொண்டு, நாவற்குளம் வழியாக புதுச்சேரிக்கு சென்றது தெரிய வந்தது.அதன் பேரில், புதுச்சேரி, குறிஞ்சி நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் கண்ணப்பன், 21; லாஸ்பேட்டை, அன்னை பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சேகர் மகன்விஜயகுமார், 21; ஜீவானந்தபுரம், திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் வெடிமுத்து என்கிற ஆகாஷ், 22; ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.அதில், கண்ணப்பன், விஜயகுமார் ஆகியோர் கடைக்குள் புகுந்து திருடியதும், வெடிமுத்து வெளியில் நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என கண்காணித்ததும் தெரியவந்தது.மேலும், கடந்த 2ம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள செந்தில்முருகன் என்ற மளிகை ஸ்டோரில், எண்ணெய் கேன்கள் திருடியதும், கடந்த 20ம் தேதி நள்ளிரவு அந்த கடைக்கு அருகில் இருந்த கிேஷார், சக்திவேல் ஆகியோரின் கடைகளை உடைத்து, மொபைல் போன், ரொக்கப்பணம் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.மேலும், அவர்கள், புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை, டி.நகர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருடியிருப்பதும் தெரிய வந்தது.அதன் பேரில், மூவரை யும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 37 மொபைல் போன்கள், 4 ஸ்மார்ட் வாட்ச்சுகள், 30 ஆயிரம் ரூபாய், ஒரு யமாஹா (ஆர்1) பைக் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய 2 கட்டர், ஒரு காஸ் வெல்டிங் மிஷினையும் பறிமுதல் செய்தனர்.


சொகுசு வாழ்க்கைக்கு கொள்ளை

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், பாலிடெக்னிக் கல்லுாரியில் ஐ.சி.இ., படித்தவர். கண்ணப்பன், தாகூர் கலைக்கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வெடிமுத்து பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். நண்பர்களான மூவரும், ஆடம்பர வாகனம், விதவிதமாக உடைகள் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு, புதுச்சேரி மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் உள்ள கடைகளை குறி வைத்து திருடியதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.'யூ டியூப்' பயன்படுத்திபொருள் வாங்கிய நபர்கள்

திருடுவதற்காக, 'யூ டியூப்'பில் ெஷட்டர் உடைப்பதற்கு எந்த ஆயுதங்களை பயன்படுத்தலாம் என ஆய்வு செய்துள்ளனர். அப்போது, கட்டர், காஸ் வெல்டிங் மிஷின் போன்ற பொருட்களைக் கொண்டு, சுலபமாக பூட்டுகளைத் திறக்கலாம் என தெரிந்து கொண்டனர். இதற்காக அவர்கள் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள கடையில், கட்டர், காஸ் வெல்டிங் மிஷின் வாங்கியது தெரிய வந்தது.நோட்டம் விட்டு திருட்டு

கடந்த 20ம் தேதி நள்ளிரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள கடைகளை மூன்று நபர்களும், நோட்டமிட்டுள்ளனர். ஆட்கள் நடமாட்டமில்லாத நேரத்தில், மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து, 30 ஆயிரம் ரூபாயும், மொபைல் போன் கடையை உடைத்து ஒரே ஒரு மொபைல் போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். பின், மொரட்டாண்டி வரை சென்ற மூவரும், அதிக ஆசைப்பட்டு, மீண்டும் சாலையோரத்தில் கிடந்த சாக்கு பையை எடுத்து வந்து, அதே மொபைல் போன் கடைக்குள் மீண்டும் புகுந்து, மற்ற மொபைல் போன்கள், வாட்ச்சுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X