புகையிலை பொருட்கள் கடத்தல்; புதுச்சேரி ஆசாமிகள் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
நெல்லிக்குப்பம்-பைக்கில் 15 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்திய, புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார், வான்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிற்குமாறு கூறினர். ஆனால், அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றதால்,
புகையிலை பொருட்கள் கடத்தல்; புதுச்சேரி ஆசாமிகள் கைது



நெல்லிக்குப்பம்-பைக்கில் 15 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்திய, புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார், வான்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிற்குமாறு கூறினர். ஆனால், அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றதால், போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.இருவரும் தங்களது பைக்கில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் 15 கிலோ அளவுக்கு இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர்கள், புதுச்சேரி மணமேட்டை சேர்ந்த குணசேகரன் மகன் முத்து, 39; மடுகரையை சேர்ந்த ஜமால் முகமது மகன் அம்ஜத்கான், 38; என்பது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், புதுச்சேரியில் இருந்த கடத்தி வரப்பட்ட 15 கிலோ ஹான்ஸ் புகையிலை பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X