அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிதம்பரம்-பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, நிர்வாகிகள் பலரை கைது செய்ததை கண்டித்து, சிதம்பரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில், லப்பை தெரு பள்ளிவாசல் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, பள்ளிவாசல் தலைவர் ஹெலீம் தலைமை வகித்தார். ஈக்தா பள்ளிவாசல் தலைவர் ஜாகிர்
அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்



சிதம்பரம்-பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, நிர்வாகிகள் பலரை கைது செய்ததை கண்டித்து, சிதம்பரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில், லப்பை தெரு பள்ளிவாசல் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, பள்ளிவாசல் தலைவர் ஹெலீம் தலைமை வகித்தார். ஈக்தா பள்ளிவாசல் தலைவர் ஜாகிர் உசேன், சிதம்பரம் ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மக்ருதீன், சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர் தில்லை மக்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் நோக்கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை அரசு கைது செய்துள்ளதாக, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.கடலுார் ஏ.டி.எஸ்.பி.,க்கள் அசோக்குமார், ஆரோக்கியராஜ், சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சிதம்பரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X