தமிழகத்தில் 51 இடங்களில் அணிவகுப்பு: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை : காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த 1925-ல் விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு காந்தி பிறந்த
RSS,Route March,Tamilnadu,October 2,RSS Workers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கடந்த 1925-ல் விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடையுடன் அணிவகுப்பு நடத்த, நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


அதை தொடர்ந்து, 51 இடங்களில் அணிவகுப்பை நடத்த, ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடுகளை செய்து வருகிறது. அணிவகுப்பு நிறைவில் பொதுக்கூட்டமும் நடக்கவுள்ளது.

அணிவகுப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரும் சீருடையில் பங்கேற்க உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Sivathanu Pillai - Nagercoil,இந்தியா
24-செப்-202216:55:57 IST Report Abuse
N.Sivathanu Pillai ஆர் எஸ் எஸ் இதுபோன்று ஊர்வலம் மட்டும் அல்லாது பொதுக்கூட்டங்களையும் நடத்த வேண்டும்.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
24-செப்-202216:03:26 IST Report Abuse
Bala ஆர் எஸ் எஸ் இதுபோன்று ஊர்வலம் மட்டும் அல்லாது பொதுக்கூட்டங்களையும் நடத்த வேண்டும்.
Rate this:
Cancel
aravind - Kanyakumari,இந்தியா
24-செப்-202215:30:38 IST Report Abuse
aravind ஆர் எஸ் எஸ் அமைப்பு மட்டும் இல்லை என்றால் இந்திய இன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுக்கு நூறாக உடைந்திருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தான் போல பிச்சை எடுக்கும் நிலை வந்திருக்கும்
Rate this:
beindian - doha,கத்தார்
24-செப்-202215:51:22 IST Report Abuse
beindianகாமெடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X