அரசு கல்லூரி மாணவர்களுக்கு 'லைசன்ஸ்'; சிதம்பரத்தில் முதல்முறையாக ஆர்.டி.ஓ., அதிரடி

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிதம்பரம் -தமிழகத்தில் முதல்முறையாக, சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவர்கள் 50 பேருக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக நேரடியாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்குட்பட்ட
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 'லைசன்ஸ்'; சிதம்பரத்தில் முதல்முறையாக ஆர்.டி.ஓ., அதிரடி



சிதம்பரம் -தமிழகத்தில் முதல்முறையாக, சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவர்கள் 50 பேருக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக நேரடியாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு, சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேரடியாக சென்று, டிரைவிங் தேர்வு நடத்தி, லைசன்ஸ் வழங்கியுள்ளனர்.கடலுார் மாவட்டத்தின் பின்தங்கிய, விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.இக்கல்லுாரியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும், 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, மாணவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் பெற உதவுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.இதையடுத்து, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தென்னரசு, உடற்கல்வித்துறை இயக்குனரான பேராசிரியர் சரவணன் ஆகியோர், மாணவர்களை ஆவணங்களோடு தனி அரசு பஸ் மூலமாக சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து, முதல் கட்டமாக, பழகுனர் உரிமம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, காட்டுமன்னார்கோவில் கல்லுாரிக்கே நேரடியாக சென்று, மாணவர்களை வாகனம் ஓட்ட சொல்லி (டெஸ்ட்) ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று லைசன்ஸ் வழங்கப்பட்டது. சிதம்பரம் ஆர்.டி.ஓ., அருணாச்சலம், ஆய்வாளர் விமலா ஆகியோர் லைசன்சை மாணவர்களுக்கு வழங்கினர்.தமிழகத்திலேயே அரசு கல்லுாரி மாணவர்களுக்கு நேரடியாக டிரைவிங் லைசன்ஸ் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வேலை பெற்ற 5 பேர்

கடந்த வாரத்தில், கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், பழகுநர் உரிமம் வைத்திருந்த காரணத்திற்காகவே 5 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கு ரூ. 17 ஆயிரம் சம்பளத்தில் தனியார் நிதி நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்கியது. தற்போது, லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X