சிக்னல் பிரச்னைகளால் 5 மணி நேரம்தாமதமாக வந்த சாரதா எக்ஸ்பிரஸ் ரயில்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திண்டிவனம்-சிக்னல் பிரச்னைகளால், சாரதா எக்ஸ்பிரஸ் ரயில், 5 மணி நேரம் தாமதத்திற்குப் பின், திண்டிவனம் ரயில் நிலையம் வந்தது.அயோத்தியாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒரு முறை சாரதா எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மதியம் 12:00 மணிக்கு வந்தடையும்.அங்கிருந்து செங்கல்பட்டு, மேல் மருவத்துார், திண்டிவனம் வழியாகச் செல்லும் ரயில், மாலை



திண்டிவனம்-சிக்னல் பிரச்னைகளால், சாரதா எக்ஸ்பிரஸ் ரயில், 5 மணி நேரம் தாமதத்திற்குப் பின், திண்டிவனம் ரயில் நிலையம் வந்தது.அயோத்தியாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒரு முறை சாரதா எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மதியம் 12:00 மணிக்கு வந்தடையும்.அங்கிருந்து செங்கல்பட்டு, மேல் மருவத்துார், திண்டிவனம் வழியாகச் செல்லும் ரயில், மாலை 4:30 மணிக்கு, விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும். ஆனால், திண்டிவனத்தில் நிற்காது.இந்நிலையில், நேற்று வரும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னைகளால், மாலை 3:38 மணிக்கு, திண்டிவனம் ரயில்வே நிலையத்தைக் கடந்து செல்ல வேண்டிய ரயில், இரவு 8:30 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையத்தில் திடீரென நின்றது.இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது, 'முன்னால் சென்ற புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூட்டேரிப்பட்டில் சிக்னல் வேலை செய்யாததால் அங்கு நிறுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சாரதா எக்ஸ்பிரஸ் ரயில், திண்டிவனம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின், சிக்னல் சரி செய்தவுடன் விழுப்புரம் புறப்பட்டு சென்றது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X