ரோட்டை சுத்தம் செய்த ஏட்டு

Added : செப் 24, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சுபாஷ் சீனிவாசன். இவர் பணிநேரம் போக ஊரணிகளை துாய்மை செய்வது, மரங்களில் ஆணியை எடுப்பது, கொரோனா காலத்தில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கல் உள்ளிட்ட சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் எதிரில்
ராமநாதபுரம், போலீஸ் ஏட்டு, சுபாஷ் சீனிவாசன் ,Ramanathapuram, Police, Subhash Srinivasan,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சுபாஷ் சீனிவாசன். இவர் பணிநேரம் போக ஊரணிகளை துாய்மை செய்வது, மரங்களில் ஆணியை எடுப்பது, கொரோனா காலத்தில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கல் உள்ளிட்ட சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் எதிரில் ராமேஸ்வரம் ரோட்டில் ஜல்லி கற்கள் அதிகளவில் சிதறிக்கிடந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தை அறிந்த ஏட்டு சுபாஷ் சீனிவாசன் ஜல்லிகற்களை விளக்குமாறால் அகற்றி ரோட்டை சுத்தம்செய்தார். இதனை பார்த்த பொது மக்கள் அவரது சமூக சேவையை பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X