போலீஸ் செய்திகள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெட்ரோல் பங்கில் துணிகரம்ராமநாதபுரம்: ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி மகன் ஹேமநாதன் 20. சேதுபதி அரசு கலை கல்லூரியில் பி.ஏ.,பொருளாதரம் இறுதியாண்டு படிக்கிறார். பகுதி நேரமாக குமரய்யா கோயில் அருகே பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். செப்.21 இரவு 10:15 மணிக்கு பணியில் இருந்த போது டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் பெட்ரோல் நிரப்பி




பெட்ரோல் பங்கில் துணிகரம்



ராமநாதபுரம்: ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி மகன் ஹேமநாதன் 20. சேதுபதி அரசு கலை கல்லூரியில் பி.ஏ.,பொருளாதரம் இறுதியாண்டு படிக்கிறார். பகுதி நேரமாக குமரய்யா கோயில் அருகே பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். செப்.21 இரவு 10:15 மணிக்கு பணியில் இருந்த போது டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற போது ஹேமநாதனிடம் இருந்த அலைபேசியை பறிக்க முயன்றனர்.பின்னர் கத்தியை காட்டி அவரிடம்இருந்த 6520 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.புகாரில் கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்னேஷ்வரன் 25, காந்தி நகர் பிரகாஷ் 25, மீது வழக்கு பதிந்து தேடுகின்றனர்.* மேலும் ஒரு வழக்கு: ராமநாதபுரம் அண்ணா நகர் குட்ெஷட் காலனியை சேர்ந்த அஜித் மனைவி ஜோதிகா 20. கணவன் மனைவி இருவரும் முளைகொட்டு திருவிழா முடிந்து வந்து வீட்டின் முன்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த விக்னேஷ்வரன், பிரகாஷ் இருவரும் கணவன் மனைவியிடம் தகராறு செய்து கல் வீசி தாக்கினர். காயமடைந்த ஜோதிகா ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் டவுண் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


--------------------------------------------------சிறுமி கடத்தல்


திருவாடானை: தொண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி, ஆறு மாதத்திற்கு முன்பு கோவை அவினாசிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் நுாற்பாலையில் வேலை பார்த்தார். அப்போது கோவை கண்ணப்பன் நகரை சேர்ந்த மணி 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த பெற்றோர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். தொண்டியில் தனியார் கிளினிக்கில் சிறுமி சில மாதங்களாக வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய மணி, அவரை கடத்தி சென்றுவிட்டார். சிறுமியின் தந்தை புகாரில்தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X