அரசு பள்ளிகளில் இன்று துாய்மைப் பணி

Added : செப் 24, 2022 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு பள்ளிகளில் ஒரே நேரத்தில் துாய்மைப்பணி மேற்கொள்வது குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் 1,290 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியம், சுகாதாரத்தினைக் காத்திடும் வகையில்



விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு பள்ளிகளில் ஒரே நேரத்தில் துாய்மைப்பணி மேற்கொள்வது குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் 1,290 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியம், சுகாதாரத்தினைக் காத்திடும் வகையில் சுகாதாரமான கழிவறைகள் ஏற்படுத்தித் தருவது அவசியமாகும்.அரசு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் தன்னார்வலர்களுடன் இணைந்து மாணவ, மாணவியர்களின் நலன்கருதி சுத்தமான கழிவறையை ஏற்படுத்திக் கொடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளை துாய்மைப்படுத்த வட்டார அளவில் குழு அமைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி அனைத்து கழிவறைகளையும் பழுது பார்த்து, சீரமைத்து பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வரவேண்டும். இப்பணியினை இன்று 24ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X