மாடித்தோட்டம் அமைக்க மானியம் தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஓசூர், : ஓசூரில், மாடித்தோட்டம் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, தோட்டக்கலை உதவி இயக்குனர் வியானி ஜெனிபர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஓசூர் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 590 மாடித்தோட்டங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 450 ரூபாயில், 50 சதவீத மானியத்தில், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.


ஓசூர், : ஓசூரில், மாடித்தோட்டம் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, தோட்டக்கலை உதவி இயக்குனர் வியானி ஜெனிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
ஓசூர் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 590 மாடித்தோட்டங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 450 ரூபாயில், 50 சதவீத மானியத்தில், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஒரு தொகுப்பில், செடி வளர்க்கும், 6 பைகள், 2 கிலோ தென்னை நார்கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், தலா, 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் டிரைகோடெர்மா விரிடி, 100 மில்லி வேப்ப எண்ணெய், ஒரு கையேடு இருக்கும்.


மாடித்தோட்டம் அமைத்து, நஞ்சு இல்லாத காய்கறிகளை சாகுபடி செய்ய விரும்பும் மக்கள், ஆதார் அட்டை ஜெராக்ஸ், 2 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன், ராயக்கோட்டை சாலையில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது http://tnhorticulture.tn.gov.in/kitnew/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இடுபொருட்களை பெற்று கொள்ளலாம். ஒரு ஆதார் கார்டுக்கு, 2 தொகுப்புகள் வரை பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X