பஸ் உரிமையாளர்களுடன்ஆர்.டி.ஓ., ஆலோசனை

Added : செப் 24, 2022 | |
Advertisement
விழுப்புரம்-புதுச்சேரி மற்றும் விழுப்புரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதாகவும், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்வதாகவும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை



விழுப்புரம்-புதுச்சேரி மற்றும் விழுப்புரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதாகவும், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்வதாகவும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில் செல்லும் தனியார் பஸ்களில் விதி மீறல் சம்பவங்கள் எதுவும் நடக்காது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.மீறினால் மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X