ஜன்னல் கம்பியை வளைத்து தப்பிய கைதிக்கு சிறை

Added : செப் 24, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷனில்இருந்து கம்பியை வளைத்து தப்பியோடிய விசாரணை கைதிஅஸ்ரப்அலி 35 மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ராமநாதபுரம் நகர் வெற்றிலைக்கார தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி 35. சக்கரைக்கோட்டை நேரு நகரில் வசிக்கிறார். இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. கேணிக்கரை போலீசார் செப்.20ல் அஸ்ரப்அலியை பிடித்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷனில்இருந்து கம்பியை வளைத்து தப்பியோடிய விசாரணை கைதிஅஸ்ரப்அலி 35 மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் நகர் வெற்றிலைக்கார தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி 35. சக்கரைக்கோட்டை நேரு நகரில் வசிக்கிறார். இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. கேணிக்கரை போலீசார் செப்.20ல் அஸ்ரப்அலியை பிடித்து விசாரித்தனர்.விசாரணைக்காக ராமநாதபுரம் பஜார் போலீசாரிடம் அஸ்ரப் அலி ஒப்படைக்கப்பட்டார்.செப். 21 அன்று காலை போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறைக்கு சென்ற அஸ்ரப் அலி ஜன்னல் கம்பியை வளைத்து தப்பிச்சென்றார்.

விசாரணைக்காக அழைத்து வந்த நிலையில்போலீஸ் ஸ்டேஷனில்இருந்து தப்பித்துச் சென்றதால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் மண்டபம் பகுதியில் பதுங்கியிருந்த அஸ்ரப் அலியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X