அரசு ஊழியர்களுக்கு வரி பிடித்தம் குறித்த ஆலோசனை கூட்டம்| Dinamalar

அரசு ஊழியர்களுக்கு வரி பிடித்தம் குறித்த ஆலோசனை கூட்டம்

Added : செப் 24, 2022 | |
தர்மபுரி : அரசு ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் குறித்து, கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருமான வரித்துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் பாரதி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்கள் துறையில்



தர்மபுரி : அரசு ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் குறித்து, கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருமான வரித்துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் பாரதி பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்கள் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருமான வரி வரம்பிற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு வரி பிடித்தம் செய்து வருகின்றனர்.



இவர்கள், வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட அறிக்கையை, சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதில் குறைகள் ஏதும் இருந்தாலோ அல்லது வருமான வரி பிடித்தம் செய்வது குறித்து சந்தேகங்கள் இருந்தாலோ உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் அரசு பிற பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், வருமான வரி பிடித்தம் செய்து, அதன் விவரங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X