விழுப்புரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை துவக்கம்| Dinamalar

விழுப்புரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை துவக்கம்

Added : செப் 24, 2022 | |
விழுப்புரம்-விழுப்புரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது:கோ ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம்
விழுப்புரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை துவக்கம்



விழுப்புரம்-விழுப்புரம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது:கோ ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வந்துள்ளது.இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் விற்பனை நிலையத்திற்கு 120 லட்சம் ரூபாயும், திண்டிவனம் விற்பனை நிலையத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி வாடிக்கையாளர்களிடம் மாதம் தோறும் 300 முதல் 5,000 ரூபாய் வரை 10 மாத தவணை மட்டும் பெறப்படுகிறது. 11 மற்றும் 12வது மாத தவணைகளை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உள்ளது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, விழுப்புரம் விற்பனை நிலைய மேலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X