மயான பாதைஅமைக்கும் பணி

Added : செப் 24, 2022 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அருகே இரு தரப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மயானப்பாதை அமைக்கும் பணி நடந்தது.விழுப்புரம் அடுத்த கல்பட்டில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு போதிய இடவசதியின்றி மயானம் உள்ளது. போதிய வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு கொடுத்து, போராட்டங்கள் நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு 40 சென்ட் பரப்பளவில் மயானத்திற்கு



விழுப்புரம்-விழுப்புரம் அருகே இரு தரப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மயானப்பாதை அமைக்கும் பணி நடந்தது.விழுப்புரம் அடுத்த கல்பட்டில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு போதிய இடவசதியின்றி மயானம் உள்ளது. போதிய வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு கொடுத்து, போராட்டங்கள் நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு 40 சென்ட் பரப்பளவில் மயானத்திற்கு அரசு இடம் ஒதுக்கியது.இந்த மயானத்திற்குச் செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.இதையடுத்து, நேற்று மயான பாதை அமைக்கும் பணியில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், டி.எஸ்.பி., பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான அலுவலர்கள் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X