பாலிசிக்கான போனசை உயர்த்த கோரி எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி : பாலிசிக்கான போனசை உயர்த்தக்கோரி, எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகம் முன், அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை


கிருஷ்ணகிரி : பாலிசிக்கான போனசை உயர்த்தக்கோரி, எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகம் முன், அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில், பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்க வேண்டும். 5 ஆண்டுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பலமுறை கே.ஒய்.சி.,க்காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும்
. ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்தி, பழைய முறையையே பின்பற்ற வேண்டும். பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். பணிக்கொடையை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X