பரோடா வங்கியில் விவசாயக் கடன் முகாம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் பரோடா வங்கியில், விவசாயக் கடன் முகாம் நடந்தது.முகாமிற்கு, மண்டல தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிராந்திய தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர், திண்டிவனம் வேளாண் துறை இணை இயக்குனர் சரவணன், பெண்களின் நிதி மேம்பாட்டிற்காக விவசாயம் சம்மந்தப்பட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
பரோடா வங்கியில் விவசாயக் கடன் முகாம்



திண்டிவனம்-திண்டிவனம் பரோடா வங்கியில், விவசாயக் கடன் முகாம் நடந்தது.முகாமிற்கு, மண்டல தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிராந்திய தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர், திண்டிவனம் வேளாண் துறை இணை இயக்குனர் சரவணன், பெண்களின் நிதி மேம்பாட்டிற்காக விவசாயம் சம்மந்தப்பட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து பேசினார்.முகாமில், 175 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும், கடனை திருப்பிச் செலுத்துவதன் நன்மை குறித்தும் மண்டல தலைவர் பேசினார். ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்தும், ஓய்வூதிய திட்டங்கள் பற்றியும் பிராந்திய தலைவர் விளக்கினார்.ஏற்பாடுகளை, திண்டிவனம் வங்கி கிளை மேலாளர் திருநாவுக்கரசு, வேளாண்துறை அதிகாரி தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X