சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் ..| Dinamalar

சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் ..

Added : செப் 24, 2022 | |
சாத்துார் : சேதமடைந்த ரோடு, வீணாகும் குடிநீர், செயல்படாத சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகளின்றி சாத்துார் நகராட்சி மேலக் காந்தி நகரில் திணறி வருகின்றனர்.அனைத்து தெருக்களிலும் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாத்தூர் நகராட்சியில் ஏழாவது வார்டாக உள்ளது மேல காந்தி நகர்.இந்நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை, இரும்பு பட்டறைகள், பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும்
சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் ..

சாத்துார் : சேதமடைந்த ரோடு, வீணாகும் குடிநீர், செயல்படாத சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகளின்றி சாத்துார் நகராட்சி மேலக் காந்தி நகரில் திணறி வருகின்றனர்.அனைத்து தெருக்களிலும் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

சாத்தூர் நகராட்சியில் ஏழாவது வார்டாக உள்ளது மேல காந்தி நகர்.இந்நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை, இரும்பு பட்டறைகள், பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை, வீடுகள் மிகுந்தபகுதி என்பதால் லோடு ஆட்டோ, ேஷர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.முறையான ரோடு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது ரோடு முழுவதும் மண் சாலையாக மாறிவிட்டது.கரிசல் மண் என்பதால் சிறிய மழை பெய்தாலும் இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியும் ஆக மாறிவிடுகிறது.ஆட்டோக்கள் லாரிகள் சேற்று மண்ணில் அடிக்கடி புதைந்து சிக்கிக் கொள்ளுகின்றன. இவற்றை மீட்பதற்குள் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது.காலையில் பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் ஆட்டோக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



வெள்ளைக்கரை ரோட்டில் ஒரு ஆண்டுக்கு முன்னதாக ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. தார் ரோடு அமைக்கப்படவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு முழுவதும் சாலையின் இரு புறமும் குவிந்து கிடக்கிறது.இதில் இரு சக்கர வாகனத்தை ஒட்டி செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக முறையான ரோடு வசதி இன்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் விரைவில் இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர் -


ரோடு வசதியில்லை


மணி, சாத்துார்: எல்லா தெருகளிலும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்ட தெருக்கள் முற்றிலும் சிதைந்து போன நிலையில் உள்ளது. பலர் தெருவில் கிடந்த கற்களை எடுத்துச் சென்று அவரவர் வீட்டு முன்பு பதித்துக் கொண்டனர். இதனால் அரசு நிதி தான் வீணாகி வருகிறது.


குடிநீர் வீண் ஆகிறது


சக்தி, சாத்துார்: மேல காந்தி நகர் ரோட்டில் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நகராட்சியில் தெரிவித்தால் அது கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் என்று கூறுகிறார்கள். எந்த கிராமம் என்று தெரியவில்லை. குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது அனைவருக்கும் தெரிந்திருந்தும் அதனை சரி செய்ய அதிகாரிகள் முன் வரவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.


வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு


மாரியப்பன், சாத்துார்: மேல காந்தி நகர் ரோட்டில் பல வருடங்களாக செயல்படாத சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்வதன் மூலம் இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவது குறையும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பகிர்மானக் குழாயை மட்டும் பதித்து உள்ளனர். விரைவில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.


ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும்


பி.ஜெயலட்சுமி, கவுன்சிலர், சாத்துார்: வீடுகளுக்கு குடிநீர் சர்வீஸ் வழங்கியவுடன் புதிய ரோடு போடப்படும். குடிநீர் வீணாவது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சரி செய்யப்படும். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X