ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம்| Dinamalar

ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம்

Added : செப் 24, 2022 | |
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜிங்கல் கதிரம்பட்டி பஞ்.,க்குட்பட்ட பணங்காட்டூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த வாரம் குடிசை மற்றும் டெண்ட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். தகவலறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் திலகம், கடந்த, 20ல் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற


போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜிங்கல் கதிரம்பட்டி பஞ்.,க்குட்பட்ட பணங்காட்டூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த வாரம் குடிசை மற்றும் டெண்ட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். தகவலறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் திலகம், கடந்த, 20ல் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.


இதனால், தாசில்தாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசாருடன் அங்கு சென்ற தாசில்தார் திலகம் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X